கனமழையால் மரம் முறிந்து விழுந்து சுற்றுச்சுவர் சேதம்

அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தது.
மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த சுற்றுச்சுவர்.
மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த சுற்றுச்சுவர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி பின்புறம் உள்ள மகளிர் விடுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து சுற்று சுவர் மீது விழுந்து சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தன. இதில் விடுதி சுற்று சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது .

அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை . இதனை தொடர்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது

X

Maalai Malar
www.maalaimalar.com