search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prohibition to appoint"

    • சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அறங்காவலரை நியமிக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
    • மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இதன் நிர்வாக அறங்காவலர் ஆனந்த் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் தேவாங்கர் சமூகத்திற்கு பாத்தி யப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு குத்தகை விடப்பட்டது. ஆனால் அவர்கள் நிலத்தை குத்தகை காலம் முடிந்து ஒப்ப டைக்காமல் விற்பனை செய்துள்ளனர். அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மனுதாரர் புகார் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் ஆனந்தை நீக்கி அதற்கு பதிலாக வேறு நபரை இந்து சமய அறநிலை நியமித்தது. இதற்கு தடை விதிக்க கோரி ஆனந்த் மதுரை ஐகோர்ட்டை நாடினார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி தனது உத்தரவில் மனுதாரர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் புதிதாக நிர்வாகிகளை நியமித்து குழப்பி வருகிறார்கள்.

    எனவே நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கோவில் அறங்காவலராக புதிய நபரை நியமிக்க தடை விதிக்கப்படுகிறது என தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

    ×