search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் ஒருவர் இறந்தால் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
    X

    விபத்தில் ஒருவர் இறந்தால் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு

    • பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி.தங்கராமன் அறிவுரை
    • மாணவர்கள் 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொண்டு தான் பைக்குகள் ஓட்ட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் கலந்து கொண்டு மாணவர்களிடையே அறிவுரை வழங்கி பேசியதாவது,

    மாணவர்கள் 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொண்டு தான் பைக்குகள் ஓட்ட வேண்டும்.ஆர்வ மிகுதியில் வீட்டில் உள்ள உறவினர்களின் பைக்குகளை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து ஓட்டக்கூடாது. நண்பர் களை பைக்கில் ஏற்றிக் கொண்டு சாலைக்கு வரக்கூடாது.

    போக்குவரத்து விதி முறைகளை தெரிந்து கொண்டு சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும். கவனமாகவும், ஜாக்கிரதை யாகவும் வாகனம் ஓட்டி னால் விபத்துகள் ஏற்படாது.

    விபத்தில் ஒருவரை இழந்தால் அது அந்த குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.வாகனத்தில் வெளியே கிளம்பினால் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வீட்டில் காத்து கொண்டிருப்பார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    நோயால் இறப்பவரை விடவும் சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வளைவில் திரும்பும் முன் முதலில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.10 மீட்டர் தூரத்தில் திரும்பும் பக்கம் சிக்னல் செய்ய வேண்டும்.

    ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது.அதன் பெல்ட்டை சரியாக நாடியில் போட வேண்டும்.போலீசுக்கு பயந்து ஹெல்மெட் போடாதீர்கள்.உங்கள் உயிருக்கு பயந்து ஹெல்மெட் போடுங்கள். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பி டித்தால் விபத்தில்லாமல் சென்றிடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இன்ஸ்பெக் டர் வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து விதிகள் குறித்து பதாகை மூலம் விளக்கி பேசினார். சப் - இன்ஸ்பெக்டர்கள் குருநா தன், பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை ஆன்டி புஷ்ப ரெனிதா, என்.எஸ்.எஸ்.ஒருங்கிணைப்பாளர் ஜோஸ், பள்ளி உடற்கல்வி இயக்குனர் வளர்மதி, உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஜூடின், ஷோபா மற்றும் ஆசிரியர்கள் மது, ஜெகன் உள்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×