search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல்"

    • திருமணம் ஆகாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளை அடுத்த மூலச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 36). கூலி தொழிலாளி.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற ராஜேஷ்குமார் நேற்று காலை விடிந்தும் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப் போட்டு ராஜேஷ்குமார் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் பாக்கியலட்சுமி (65) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை தனிப்படையினர் வாகன தணிக்கை
    • இரணியல் போலீஸ் விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை தோட்டியோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தியபோது டெம்போ டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    டெம்போவை தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி எம்சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. டெம்போவுடன் அவற்றை பறிமுதல் செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • குளச்சல் போலீசார் தீவிர விசாரணை
    • மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் ‘தின்னர்’ எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் வடக்கு சரல் காலனியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37), மர வேலை செய்யும் பட்டறையில் தொழிலாளி யாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் பட்டறையில் இருந்து வழக்கம்போல வீட்டுக்கு சாப்பிட சென்று உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வேலைக்கு வர வில்லை.

    இந்தநிலையில் குருந்தன் கோட்டைஅடுத்த ஆலன் விளையில் ஆலய நிர்வா கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் அசோக்குமார் எரிந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.

    குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் இரணியல் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் 'தின்னர்' எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டனர். திருமணமாகாத அசோக்கு மாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் அதனை அவரது தாயார் கண்டித்த தாகவும் கூறப்படுகிறது.

    எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அடித்து கொலை செய்யப்ப ட்டு எரிக்கப்பட்டு இருக்க லாமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    உடல் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல்
    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா பல இடங்களில் விற்கப்படுவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று காலை கண்ணாட்டு விளை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

    இதனை தொடர்ந்து போலீசார் 4 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 4 பேரிடம் இருந்தும் 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28), கக்கோடு அஜித் (27), தாணுதாஸ் (35), குருந்தன் கோடு காளிதாஸ் (23) என தெரிய வந்தது.

    • போலீசார் இரு தரப்பினரையும் வரவழைத்து பேசினர்.
    • திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த சரல்விளையைச் சேர்ந்தவர் அய்யப்பன்.இவரது மகள் அஸ்வினி (வயது 18).

    இவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி அஸ்வினி வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை

    இதனைத் தொடர்ந்து அய்யப்பன் தனது மகளை பல இடங்களிலும் தேடி னார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து மாயமான அஸ்வினியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினி நேற்று ஒரு வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் வினு (21) என்றும் தாங்கள் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் அஸ்வினி தெரிவித்தார்.

    மேலும் தனக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பா டுகள் செய்யப்பட்டதாக வும் அது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினுவை திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதனை தொடர்ந்து போலீசார், இரு தரப்பி னரையும் வரவழைத்து பேசி னர்.

    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தங்கள் செல்போன் வெளிச்சம் மற்றும் செய்கைகள் மூலம் சுமார் 300 மீட்டருக்கு முன்பாக ரெயிலை நிறுத்தினர்.
    • பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தாய்-மகள் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ் (49).

    இவர் நேற்று இரவு திங்கள்நகரில் இருந்து அழகிய மண்டபத்திற்கு காரில் வந்தார். காரில் அவரது மகள் ஆஷா (24), ஆஷாவின் மகள் செரியா (4) ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் பரம்பை ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது வழி தெரியாமல் ரெயில்வே துறையினர் போட்டு இருந்த மண்பாதையில் சென்று விட்டனர்.

    சிறிது தூரம் சென்றதும் பாதை மாறிவிட்டதை உணர்ந்த வர்கீஸ் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரெயில்வே தண்ட வாளத்தில் கவிழ்ந்தது.

    அப்போது திருவனந்த புரத்தில் இருந்து நாகர் கோவில் நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டி ருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தங்கள் செல்போன் வெளிச்சம் மற்றும் செய்கைகள் மூல மும் சுமார் 300 மீட்டருக்கு முன்பாக ரெயிலை நிறுத்தினர். இதுபற்றி திங்கள்நகர் தீயணைப்பு நிலையம், ரெயில்வே துறைக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வந்த ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் காரை கட்டி இழுத்து மீட்டனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில்கள் இயக்கப் பட்டன.

    பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தாய்-மகள் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்
    • போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் விற்பனையை தடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ஆலங்கோடு புளிய மூடு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்தப் பைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்க ளிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் ஆலங்கோடு அபினேஷ் (வயது 26), கீழ ஆப்பிக்கோடு ஆன்றோ பிரின்ஸ் (21) என தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா (வயது 48) நேற்று காலை குளிப்ப தற்காக ஹீட்டரை ஆன் செய்து உள்ளார். சிறிது நேரம் கழித்து வழக்கம் போல கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரேமா தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது கணவர் ஏசு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி மாம்பழத்து றையாறு அணை அருகே நாடாங் கோணம் பொற்றை உள்ளது. இங்கு பாறை களுக்கிடையே மனித எலும்புக் கூடு கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அது ஆண் எலும்பு கூடு என ெதரிய வந்தது.

    எனவே யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தினர்.மேலும் மாயமானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    அப்போது திருவிடை க்கோடு கோபாலப்பிள்ளை மகன் கிருஷ்ணன்குட்டி (வயது75) காணாமல் போயிருந்ததும், இது குறித்து அவரது மகள் பிரியா (43) கடந்த 24-ந் தேதி புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கிருஷ்ணன் குட்டியின் உறவினர்களை அழைத்து வந்து போலீசார் காண்பித்த னர். எலும்பு கூட்டில் இருந்த லுங்கியைத்தான் காணாமல் போன அன்று கிருஷ்ணன்குட்டி கட்டி இருந்ததாக அவரது மகள் மற்றும் உறவினர்கள் தெரி வித்தனர். காவலாளி யாக வேலை பார்த்த கிருஷ்ணன்குட்டி கடந்த சில காலமாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் கிருஷ்ணன் குட்டிதானா என்பதை உறுதி செய்ய, மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    • மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
    • தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் நட மாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையும் நடத்தி வரு கின்றனர்.

    இதையொட்டி இரணியல் சப்- இன்ஸ் பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் காரங்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்த கூறிய போது நிற்காமல் சென்றார்.

    அதனால் போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவரை விரட்டி சென்ற போது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அனுமதி இன்றி 69 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது

    அதனை பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபரை தேடி வருகின்றனர்.

    • எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
    • இரணியல் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 52). இவரது மனைவி சாரதாபாய் (48). இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கண்டன்விளை - இரணியல் ரோட்டில் தூய தெரஸ் அரங்கு அருகில் வந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் சாரதாபாய்க்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து அவரது கணவர் ஏசுதாசன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சடையமங்கலம் பவனேஷ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துக்கம் தாழாமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார்.
    • வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ள காற்றாடி மூடு பகுதியைச் சேர்ந்த வர் வேலம்மாள் (வயது 78), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்.

    இவருக்கு பகவதி அம்மாள் (57) என்ற மகளும் 2 மகன்களும் உள்ளனர். தற்போது வேலம்மாள், மகள்-மருமகன் ராதா கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்த வேலம்மாள் நேற்று முன் தினம் இறந்தார். அவரது உடலை மறுநாள் (நேற்று) தகனம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். அப்போது தாயின் உடல் அருகே பகவதி அம்மாள் துக்கம் தாழா மல் அழுது கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடி யாக அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்ட ர்கள் பகவதி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    தாய் இறந்த சோகத்தில் மகளும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பகவதி அம்மாள் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த உறவினர்கள், ஏற்கனவே தகனத்திற்காக வைத்திருந்த வேலம்மாள் உடல் அருகே வைத்தனர்.

    இறந்த பகவதி அம்மா ளுக்கு காயத்ரி (30) என்ற மகளும், அஜித் (27) என்ற மகனும் உள்ளனர்.

    ஒரே நேரத்தில் தாய்-மகள் இறந்ததை எண்ணி அங்கு வந்திருந்த பலரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து வேலம்மாள் உடல் மட்டும் நேற்று தகனம் செய்யப்பட்டது.

    பகவதி அம்மாளின் மகன் அஜித், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும் என உறவி னர்கள் தெரிவித்தனர்.

    ×