search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல்"

    • இரணியல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் உள்ள டி.வி.ஆர். பாக்ஸ் எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே காற்றாடிமூடு என்ற இடத்தில் இருந்து ஆழ்வார் கோவில் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடையில் காம்பவுண்ட் வாசல் பூட்டு உடைக்க பட்டு திறந்து கிடப்பதாக கடை மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் வந்தது.

    இதனை அடுத்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது காம்பவுண்ட் வாசல் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் இரும்பு சட்டம் உடைக்க பட்டு திறந்து கிடந்தது. கடையில் இருந்து மது பாட்டில்கள் பெட்டிகள் கடையில் வெளியே எடுத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. மேலும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து மைக்கேல் இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணையில் சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் உள்ள டி.வி.ஆர். பாக்ஸ் எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.

    முழுமையாக சோதனை செய்த பிறகு தான் எத்தனை மது பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள காமிரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுவரை துளைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது

    • இரணியல் போலீசார் 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள பேயன்குழி அடுத்த கல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 53). இவர் பேயன்குழி சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 8 மாதங்களுக்கு முன்பு பேயன்குழியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ரூ.2900-க்கு ஜவுளிகள் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் ரூ.200 கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை மறுநாள் ஏ.டி.எம்.மில் எடுத்து தருவதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கசுவாமி கடனை திருப்பி கேட்க பேயன்குழி சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மகன் நிகேஷ், அவரது நண்பர்கள் 3 பேர்கள் என 4 பேர் சேர்ந்து தங்கசுவாமியை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி கம்பு மற்றும் கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கசுவாமிக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமும், கல்லால் தாக்கியதில் மேல் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

    தங்கசுவாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கசுவாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நிகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை 4 பேர் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • இன்று பிரேத பரிசோதனை

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 41) கொத்தனார். இவர் நேற்று இரவு குழித்துறை ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பால்ராஜ் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கல்குளம் காயக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரபு (33) லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் நேற்று இரவு இரணியல் அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக வந்த ரெயில் மோதி பிரபு இறந்துள்ளார். இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோ வில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பிரபு, பால்ராஜ் இருவரது உடல்களும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படு கிறது.

    • உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே காஞ்சிரவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோணி (வயது 48), கேபிள் தொழில் செய்து வருகிறார்.

    இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பண்ணிக்கோடு ரேஷன் கடை பகுதியில் வீட்டிற்கு திரும்புவதற்காக சிக்னல் போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளை திரும்பினார்.அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஜோணி நிலை தடுமாறி மோட்டார் சைக் கிளிலிருந்து தவறி கீழே விழுந்து படுகா யம் அடைந்தார். அவரை சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி ஜோணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து இரணியல் போலீசில் அவரது தம்பி விஜயகுமார் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணி சாக்கியன்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பலியான ஜோணியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர்.

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • விசாரணையில் டெம்போவை தீ வைத்து எரித்த வாலிபர் கைது

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குழுமைகாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்கள் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

    இதில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் டெம்போவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து இருந்தது தெரியவந்தது .இது குறித்து தனிப்பிரிவு எஸ். ஐ. சிவசங்கர் தனிப்பிரிவு ஏட்டு சுஜி ஆகியோர் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்.

    அப்பொழுது குழுமைக்காடு பகுதியில் நிறுத்தி இருந்த டெம்போவை தீ வைத்து எரித்த நபர் அவர்தான் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் தீ வைத்து எரித்த வாலிபர் ராஜேஷ் (வயது 27) என்பதும் அவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தலக்குறிச்சியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பணி நிறைவு பெறவில்லை.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 6 மாதங்கள் கழித்தும் பணி நிறைவு பெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை யடுத்து மனோகர் குமார் தலைமையில் பொதுமக்கள் சுமார் 100 பேர் முத்தலக்குறிச்சி சந்திப்பில் சாலை மறியல் செய்ய திரண்டனர். அவர்களிடம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
    • 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத் தின் கதவு சரிவர மூடப்ப டாமல் திறந்திருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்தை திறந்து பார்த்தபோது ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் ஹபிஹசிந்த ருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டார் .

    அப்போது கொள்ளை யர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்திருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். மையத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த ரூ. 15 லட்சம் பணம் தப்பியது. ஏடிஎம் உடைக்கப்பட்டது குறித்து வங்கி மேலாளர் இரணியல் போலீசுக்கு தகவல் தெரி வித்தார்.

    டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கே பதிவாகி யிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகே செல்போன் கடையிலும் மர்ம நபர்கள் செல்போன் கடையின் கண்ணாடியை உடைத்து அங்கிருந்த 20 டம்மி செல்போன்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதேபோல் அங்குள்ள ஜுவல்லரி கடையின் ஷட்ட ரையும் உடைத்து கொள்ளை யடிக்க முயன்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    செல்போன் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது சிசிடிவி கேமராவில் கொள்ளையர் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்தக் காட்சிகளை வைத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த 3 கொள்ளை யிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளையர்களாக இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மர்ம கும்பல் பற்றி போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ளது திங்கள் நகர். இங்குள்ள இரணியல் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அதன் அருகே பல்வேறு கடைகளும் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக மாக இருக்கும். இன்று காலை அந்த வழியாக வந்த வர்கள், ஏ.டி.எம். அறை கதவு சரியாக மூடப்படாமல் இருப்பதை பார்த்தனர்.

    சந்தேகத்தின் பேரில் ஏ.டி.எம். மையம் அருகே அவர்கள் சென்ற போது அந்த எந்திரம் சேதப்படுத் தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி யின் மேலாளர் ஹசீந்தருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது ஏ.டி.எம். எந்தி ரத்தின் முன்பக்க கதவை யாரோ மர்ம மனிதர்கள், கம்பியால் நெம்பியிருப்பது தெரிய வந்தது.

    எனவே நள்ளிரவுக்கு மேல் யாரோ சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர், இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் பகுதியின் கீழ் உள்ள இடம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த போலீ சார், அதுகுறித்து ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஜெரோம்எடிசன் (வயத 38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் சிலுவைராஜிக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று கொன்ன குழிவிளை ஆலயத்தின் புத்தாண்டு ஆராதனையில் ஜெரோம்எடிசன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த சிலுவைராஜ், இவரது மகன் ரினோ, பவுல் ஆகியோர் ஜெரோம் எடிசனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த ஜெரோம்எடிசனை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஜெரோம்எடிசன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் போலீசில் புகார்
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெய்யூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சியாம் தம்புஜி (வயது 87). இவர் புத்தாண்டு அன்று நள்ளிரவில் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெய்யூர் தெற்கு தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று சியாம் தம்புஜியை உரசி தள்ளி விட்டு அருகில் உள்ள வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது. கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த விபத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. மேலும் சியாம் தம்புஜி பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து நெய்யூர் சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜேக்கப் ஜெயக்குமார் (73) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.
    • போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு 31-ந் தேதி இரவு அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை ஆணையடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக ஐரேனிபுரம் ஜஸ்டின் பணியாற்றினார்.

    இந்த பஸ், இரணியல் அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் சென்ற போது, இருளில் மறைந்திருந்த 2 பேர் பஸ் மீது கல் வீசி தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சுபாஷ் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

    ஆனால் கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வருவதற்குள் கல் வீசிய மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    சம்பவம் குறித்து இரணியல் போலீசில், பஸ் டிரைவர் சுபாஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பேர் மது போதையில் தள்ளாடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே அவர்கள் தான் பஸ் மீது கல் வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் வில்லுக்குறி சடையப்பனார் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்
    • தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மிடாலத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராபின்சன் ஓட்டினார்.

    இரணியல் அருகே மட விளாகம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி னார்கள். திடீரென அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸின் மீது வீசினார்கள்.

    இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டிரைவர் ராபின்சன் இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணை யில் குடிபோதையில் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    ×