search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே 3 இடங்களில் கொள்ளை முயற்சி
    X

    சி.சி.டி.வி.யில் பதிவான கொள்ளையன் உருவம்.

    இரணியல் அருகே 3 இடங்களில் கொள்ளை முயற்சி

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
    • 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத் தின் கதவு சரிவர மூடப்ப டாமல் திறந்திருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்தை திறந்து பார்த்தபோது ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் ஹபிஹசிந்த ருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டார் .

    அப்போது கொள்ளை யர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்திருப்பது தெரிய வந்தது. ஏ.டி.எம். மையத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த ரூ. 15 லட்சம் பணம் தப்பியது. ஏடிஎம் உடைக்கப்பட்டது குறித்து வங்கி மேலாளர் இரணியல் போலீசுக்கு தகவல் தெரி வித்தார்.

    டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கே பதிவாகி யிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகே செல்போன் கடையிலும் மர்ம நபர்கள் செல்போன் கடையின் கண்ணாடியை உடைத்து அங்கிருந்த 20 டம்மி செல்போன்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதேபோல் அங்குள்ள ஜுவல்லரி கடையின் ஷட்ட ரையும் உடைத்து கொள்ளை யடிக்க முயன்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    செல்போன் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது சிசிடிவி கேமராவில் கொள்ளையர் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்தக் காட்சிகளை வைத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த 3 கொள்ளை யிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளையர்களாக இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    Next Story
    ×