search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமரசம்"

    • ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார்.

    சேத்தியா தோப்பு, ஆக .18-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஆனைவாரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அண்ணாதுரை மற்றும் கிராம மக்கள் 100- க்கு மேற்பட்டோர் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்க பாதை அமைக்க வேண்டும் என ஒன்று திரண்டு வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதிஎம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை நகாய் திட்டஅலுவலரிடம் பேசி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
    • 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் கடந்த 21 -ந் தேதி வீட்டில் இருந்த வர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காணாமல் போன இளம்பெண்ணை தேடி வந்தனர். அந்த இளம் பெண் பனங்காட்டுத் தெருவை சேர்ந்த வாலிபர் விஜயபாஸ்கர் (25)காதல் வலையில் சிக்கிஅவரது ஆசை வார்த்தைகளால் மயங்கி 21-ந் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த வர் விஜய் பாஸ்கருடன் விழுப்புரம் சென்று திரு மணம் செய்து கொண்டு நேற்று பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்து ஆஜரானார்கள். அவர்களை பண்ருட்டி இன்ஸ்பெக்டர் க ண்ணன், பண்ருட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரித்தனர். அவர்களிடம் பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்களுடன் பேசிப் பார்த்தனர்.

    நான் திருமணம் செய்து கொண்டேன். விஜய பாஸ்கருடன் தான் செல்வேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்கள். உறவினர் மற்றும் பெற்றோர்கள் பெண்ணை வாலிபருடன் செல்ல விடா மல்விடாமல் தடுத்த போது போலீசார் விலக்கி விட்டு 2பேர்களை யும் அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வேண்டும் என்று என் மகளை அனுப்பி வைத்து விட்டார்கள். நாங்கள் இன்னும் ஒரு மணி நேரம் எங்கள் மகளுடன் பேசி இருந்தால் எங்கள் மகள் எங்களுடன் வந்திருப்பார் என்று என்று கூறி பண்ருட்டி4 முனை சந்திப்பில் பெண்ணின் பெற்றோர்கள் தலைமை யில் 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா பேச்சு வார்த்தை நடத்தினார்.நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர்.
    • எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து இணைக்கும் சென்னை- கன்னியாகுமரிதொழில் தட திட்ட புதியசாலை அமைக்கும்பணி கடந்த 2021 -ம் ஆண்டு தொடங்கிவேகமாக நடந்து வருகிறது. இந்த புதிய சாலைபணிக்காக நிலம் கையகப்படுத்தும்பணி மற்றும் இழப்பீடு தொகைவழங்கும்பணிகள் முழுமையாக நடந்துமுடிந்தநிலையில் அண்ணாகிராமம் ஒன்றியம் கனிசபாக்கம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர். புதிய போர் போடும் பணி தாமமமானதால் மேல்நிலை நீர்த்தேக்க.தொட்டியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிதகவல்அ றிந்ததும்அங்கு விரைந்து வந்த அண்ணா கிராமம் தி.மு.க. ஒன்றியசெ யலாளர்வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்திகி ராமபொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,என்ஜி னீயர்கள் சுந்தரி, ஜெயந்தி, ஏழிலரசி, நில எடுப்புதனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, மீரா கோமதி, கணிசபாக்கம்பஞ்சாயத்து தலைவர்திருநாவுக்கரசு ஆகியோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்துக்குள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றபிறகு புதிய சாலை அமைக்கும் பணிக்கான பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார்.கூடுதல் சார்பு நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, வழக்குரைஞர் முல்லை ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.மோட்டார் வாகன வழக்குகளுக்கான சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்குரைஞர் மகா சண்முகம் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ரூ. 4 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரத்து 902 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடி களுக்கு பெற்றுத் தரப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • முத்தலக்குறிச்சியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பணி நிறைவு பெறவில்லை.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 6 மாதங்கள் கழித்தும் பணி நிறைவு பெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை யடுத்து மனோகர் குமார் தலைமையில் பொதுமக்கள் சுமார் 100 பேர் முத்தலக்குறிச்சி சந்திப்பில் சாலை மறியல் செய்ய திரண்டனர். அவர்களிடம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசமாக முடிக்க பரிசீலனை.
    • மொத்தம் 809 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் ஆணைப்படி மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சுதா அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்ப–ட்டிருந்தது. அதில் முதல் அமர்வில் கூடுதல் மாவட்ட, விரைவு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் தலைமையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் இரண்டாவது அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசப்பெருமாள், கூடுதல் மாவட்ட உரிமையியல் ரஞ்சிதா திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவபழனி தலைமையில், கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1-ன் நீதிபதி பாரதிதாசன், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்.ரகுவீரன் ஆகியோரது பங்கேற்பில் மொத்தம் 809-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்பநல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 479-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு ஏற்பட்டு மொத்தம் ரூ.1,62,27,899/- வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பலியான மீனவர் உடல் இன்று பிரேத பரிசோதனை
    • ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது தேங்கா ப்பட்டணம் மீன்பிடித் துறை முகம். இந்த துறைமுகம் கட்டப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

    சரியான கட்டமைப்புடன் துறைமுகம் கட்டப்படாத தால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இங்கு 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

    இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் அமல்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் வைத்து போராட்டம் நடத்தி னர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், இதுவரை 28 மீனவர்கள் இறந்துள்ளனர். இனியும் தாமதிக்காமல் துறைமுகத்தை உடனே மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றனர். மேலும் பணிகள் தொடங்கிட துறை முகத்தை மூட வேண்டும், உயிரிழந்த வர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கிள்ளி யூர் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் விரைந்து வந்து மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். துறைமுகத்தை மூடுவது பற்றியும், நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படை க்கப்பட்டது. போலீசார் உடலை பெற்று ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு இருந்தது.

    ×