search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
    X

    கோப்பு படம் 

    இரணியல் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

    • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்
    • போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் விற்பனையை தடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ஆலங்கோடு புளிய மூடு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்தப் பைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்க ளிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் ஆலங்கோடு அபினேஷ் (வயது 26), கீழ ஆப்பிக்கோடு ஆன்றோ பிரின்ஸ் (21) என தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×