search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலும்புக்கூடு"

    • மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம்.
    • போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ெரயில் நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு ஏராளமான புதர்களும் உள்ளன.

    இதில் ஒரு புதர் அருகே சிலர் சென்ற போது, அங்கு மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதைப் பார்த்த ரெயில்வே பணியாளர்கள், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் மார்த் தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம். இருப்பினும் அது யார்? யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? அல்லது தற்கொலை செய்தவர்கள் எலும்புக் கூடா? என விசாரணை நடக்கிறது.இதன் முடிவில் தான் உண்மை தெரியவரும், என்றனர். மார்த்தாண்டம் ரெயில் நிலையம் பகுதியில் எலும்புக்கூடு சிக்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி மாம்பழத்து றையாறு அணை அருகே நாடாங் கோணம் பொற்றை உள்ளது. இங்கு பாறை களுக்கிடையே மனித எலும்புக் கூடு கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அது ஆண் எலும்பு கூடு என ெதரிய வந்தது.

    எனவே யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தினர்.மேலும் மாயமானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    அப்போது திருவிடை க்கோடு கோபாலப்பிள்ளை மகன் கிருஷ்ணன்குட்டி (வயது75) காணாமல் போயிருந்ததும், இது குறித்து அவரது மகள் பிரியா (43) கடந்த 24-ந் தேதி புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கிருஷ்ணன் குட்டியின் உறவினர்களை அழைத்து வந்து போலீசார் காண்பித்த னர். எலும்பு கூட்டில் இருந்த லுங்கியைத்தான் காணாமல் போன அன்று கிருஷ்ணன்குட்டி கட்டி இருந்ததாக அவரது மகள் மற்றும் உறவினர்கள் தெரி வித்தனர். காவலாளி யாக வேலை பார்த்த கிருஷ்ணன்குட்டி கடந்த சில காலமாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் அந்த எலும்பு கூடை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் கிருஷ்ணன் குட்டிதானா என்பதை உறுதி செய்ய, மீட்கப்பட்ட எலும்புக்கூடின் மண்டை ஓடு பாகங்கள் சூப்பர் இம்போசிசன் மற்றும் தொடை எலும்பு பாகங்களை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    • பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி மாயமானார்.
    • செருப்பை வைத்துகடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பாபு சங்கரின் எலும்புகள் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கீழ தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பாபுசங்கர்(வயது 39).

    மாயம்

    தினமும் மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி மாயமானார். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மூக்குப்பீறி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மனித எலும்பு கூடு கிடப்பதாக நாசரேத் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு செருப்பு ஒன்றும் கிடந்தது.

    அடையாளம் தெரிந்தது

    தூத்துக்குடியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எலும்புகள் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த செருப்பை வைத்து விசாரணை நடத்தியதில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பாபு சங்கரின் எலும்புகள் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் எதற்காக அங்கு சென்றார்? மதுபோதையில் அவர் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×