search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர்"

    • பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
    • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    விழுப்புரம்:

    உத்தரபிரதேசத்தில் ஐ.ஜி.,யாக உள்ளவரின் 18வயதுமகன்விழுப்புரம் மாவட்டம்கோட்டக்கு ப்பத்தில்இருந்து, பெரிய முதலியார் சாவடியை நோக்கி ஸ்கூட்டி யில் வந்தார். அப்போது, கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். உடனே அந்த சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் நான் எனது அப்பா ஐ.ஜி., என கூறியுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன்யாராக இரு ந்தால் என்ன எனக் கூறி மொபைல் போனில் பேசியதாகவும், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியை ஓட்டியதாகவும், 2 வழக்கு கள் பதிந்து 200 ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இ ன்ஸ்பெக்டரிடம் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று ள்ளது.

    • சோழவந்தான் இன்ஸ்பெக்டருக்கு விருது வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலனின் சேவையை பாராட்டி சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் முள்ளிபள்ளம் கிராம மக்கள் சார்பில் விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முள்ளி பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, பேரூர் தி.மு.க. செயலாளர் சத்திய பிரகாஷ், ஜெனகை மாரியம்மன் கோவில் தல வரலாறு புத்தக வெளியீட்டாளர் ஜனகராஜ், ஜவுளிக்கடை அதிபர் மணி, அறக்கட்டளை நிறுவன தலைவர் செந்தூர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் செல்வி, பொதுச் செயலாளர் நாகுஆச்சாரி மற்றும் மன்னாடிமங்கலம், முள்ளி பள்ளம் அப்துல் கலாம் அறிவியல் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

    • திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுள்ளார்.
    • காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் அசோகன் பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் நிருபர்களிடம் கூறுகையில் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் காவலரை நியமனம் செய்து குற்றங்கள் நடக்காமல் இருக்க பணியாற்றுவேன் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் கொடுக்கும் புகாரை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் கெடிலம் சேந்தநாடு களமருதூர் மடப்பட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    • இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.
    • அரித்துவாரமங்கலம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்டு வருவதால் இரு காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜா பொறுப்பேற்று ெகாண்டார்.

    இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    அரித்துவாரமங்கலம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்டு வருவதால் இரு காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றார்.
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தங்கமணி என்பவர் கரூர் மாவட்டத்திற்கு இடம் மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில்கள்ளக்குறிச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். இவர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • சாலையில் தவற விட்ட பணத்தை வாலிபர் ஒப்படைத்தார்.
    • இன்ஸ்பெக்டர் சரவணன் அதனை லலிதாவிடம் வழங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (வயது30). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து திருநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது தனக்கன்குளம் மெயின் ரோட்டில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அதை செந்தில்குமார் எடுத்து பார்த்தார். அதில் ரூ.67 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தது. அதை செந்தில்குமார் உடனடியாக திருநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதனையடுத்து மணி பர்சை தவற விட்ட வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்த லலிதா என்பவரை அழைத்து இன்ஸ்பெக்டர் சரவணன் அதனை லலிதாவிடம் வழங்கினார்.

    • தேவகோட்டையில் சாலையில் கிடந்த நகைகளை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருபவர் போரிவயல் கிராமத்தை சேர்ந்த பிரபு மனைவி பிரியங்கா (வயது28). இவர் உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு தான் பணிபுரியும் கடைவாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

    அந்த வாகனத்தில் 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். வீட்டுக்கு செல்வதற்கு முன்பு இரு சக்கர வானத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பிரியங்கா தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது பிரியங்கா பணிபுரிந்த நகைக்கடையின் மேலே காந்தி ரோட்டை சேர்ந்த நைனா முகம்மது மகன் முகமது இப்ராகிம் (35) கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது கடைவாசலில் கிடந்த பையை பார்த்தார். அதில் தங்க நகைகள் இருந்ததை கண்டு காவல்நிலையத்திற்கு சென்று 16.5 பவுன் நகையை இன்ஸ்பெக்டரிடம் ஒப்ப டைத்தார். அதில் தாலி செயின், வளையல்கள், செயின், மோதிரம் இருந்தது.

    அந்த நகை பிரியங்கா விடம் ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 16.5 பவுன் நகைகளை காவல் நிலை யத்தில் ஒப்படைத்த முகமது இப்ராகிமின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

    தெற்குலேரி அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி ஆதினங்குடியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 20).

    இவர் மோட்டார் சைக்கிளில் ஆதினங்குடியில் இருந்து வவ்வாலடிக்கு புறப்பட்டார்.

    அப்போது தெற்குலேரி அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×