search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழவந்தான்"

    • ேசாழவந்தானில் வருகிற 21-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெற இருப்ப தால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜய லட்சுமி பேக்டரி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயி ருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராய ணபுரம், தேனூர், திருவேட கம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக் குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித் துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன், பற்றாளர் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் பாண்டி திட்டங்கள் குறித்து அறிக்கை வாசித்தார்.

    இதே போல் விக்கிர மங்கலம் ஊராட்சியில் செக்கான்கோவில்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் கலியுக நாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்விசெல்வம், பற்றாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.

    வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முனி யராஜ் அறிக்கை வாசித்தார்.

    மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி, வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார்.

    திருவாலவாயநல்லூர் ஊராட்சியில்தலைவர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    இதே போல் முள்ளி பள்ளம், சி.புதூர், சித்தாலங்குடி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், குருவித்துறை மற்றும் செல்லம்பட்டி ஒன்றியத்தில் சக்கரப்ப நாயக்கனூர், எரவார்பட்டி, பானாமூப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    • சோழவந்தான் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    சோழவந்தான்

    தென்மாநில சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேக் வாண்டோ போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பங்கு பெற்றன.

    3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மதுரை கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்று தமிழகத்தில் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அர்ஜுன், மிதுழ்செல்வன் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தேக் வாண்டோ பயிற்சியாளர் தேவா, உடற்கல்வி துறை ஆசிரியர் அருண்குமார் ஆகியோர்களை பள்ளி முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • ராதாகிருஷ்ணா திருக்கல்யாணம் நடந்தது.
    • சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் 8-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரகாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 2 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஹரே கிருஷ்ணா நாம பாராயணம் இதைத் தொடர்ந்து அஷ்டபதி பஜனை இரவு குரு கீர்த்தனைகள் நடந்தது. 2-ம் நாள் காலை உற்சவ விருத்தி பஜனை பெண்கள் சீர் எடுத்து வந்தனர். ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்று ஆஞ்சநேய உற்சவம் மங்கள ஆராத்தி நடைபெற்றது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. பா.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், லயன்ஸ் கிளப் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ண பக்த மகளிர் சபா மற்றும் விழா கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சோழவந்தான் பேட்டை அரசு நிலைப்பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு உணவுகளை பரிமாறினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் லலிதா பேபி வரவேற்றார். சமுதாய வள பயிற்றுனர் செல்வி, வரி தண்டலர்கள் வெங்கடேசன் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள் வேணுகோபால், கவுதம் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பகுதிகளில் பிரதோஷ நடந்தது.
    • இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவி லில் பிரதோஷ வழிபாட்டில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்று, மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிர தோஷ வழிபாட்டில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாவய நல்லூர் மீனாட்சி சுந்தரேசு வரர் கோவில், விக்கி ரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென் கரை அகிலாண்டேசுவரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதி உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே கும்பாபிஷேக விழா நடந்தது.
    • முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தேறியது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி நல்லகுட்டி வகையறாக்கள் புனிதநீர் குடம் சுமந்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இதன்பின் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேக்கிழார் பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டியை சேர்ந்த நல்லகுட்டி வகையறா, விக்கிரமங்கலம் ஆண்டித்தேவர் வகையறா மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், பார்வர்டு பிளாக் நிர்வாகி ரெட்காசி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி சேர்மன் கலியுகநாதன், முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சோழவந்தான் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • சமுதாயக்கூடத்தில் பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மாநில நிதி ஆணைய மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.கோடி மதிபீட்டில் பஸ் நிலையம் கட்டி முடிக்கப் பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நிறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் நேற்று சமுதாயக்கூடத்தில் நடந்த பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டத்திற்கு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் பேரூராட்சி வரவுசெலவு உள்ளிட்ட 14 தீர்மானங்களை மன்றம் அங்கீகரிக்கக்கோரி வாசித்தார். இதில் 2-வது தீர்மானமான திறக்கப்படாத பேரூராட்சி பஸ் நிலையத் திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என பெயர் சூட்டப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரூராட்சி 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கணேசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதன் பின்னர் பஸ் நிலையத்திற்கு முதல்-அமைச்சர் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் கையொப்பமிட்டு மனுவை செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசினிடம் கொடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட தலைவர் ஜெயராமன் தி.மு.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் மெஜாசாரிட்டி பலம் உள்ள தால் பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்ட மன்றம் அங்கீகரிப்பதாக கூறியதையடுத்து பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கணேசன், வசந்தி ரேகா, சரண்யா, கணேசன், சண்முக ராஜா பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பிதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில் 3-வது தீர்மானமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ெரயிவே மேம்பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்ட மன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சோழவந்தானில் ராமநவமி திருக்கல்யாணம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ராம பக்த சபாவின் சார்பில் ராம நவமிவிழா 4 நாட்கள் நடந்தது. ராம நாம பாராயணத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை உஞ்சவிருத்தி நடைபெற்று ஒற்றை அக்ரகாரத்தில் இருந்து பெண்கள் வானவேடிக்கை, மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் முன்பு அமைந்திருக்கும் திருமண வைபவம் நடக்கும் மேடையில் வந்து சேர்ந்தனர். அங்கு சீதா கல்யாணம் மற்றும் ஆஞ்சநேயர் விழா நடந்தது. இன்று இரவு சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராம பக்த சபா நிர்வாகிகள் காசி விசுவநாதன், தலைவர் வரதராஜப் பண்டிட், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மகாதேவன், உதவி தலைவர் ரமணி, இணைச்செயலாளர் விசுவநாதன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவில் மலையாளம் கிருஷ்ண அய்யர் சாரிட்டிஸ் வேத பாடசாலை, சீர்திருத்தினம் அய்யர் ரூரல் டெக்னாலஜி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் நடந்தது.

    எம்.வி.எம். குழுமத் தலைவரும், பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளருமான மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
    • சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகையாற்றின் கிழக்கு கரையில் அமைந்து விசாக நட்சத்திர தலமாக விளங்கி வரும் சனீஷ்வரர் கோவிலில் திருகணித பஞ்சாங்கபடியான வக்கிர நிவர்த்தி விழா நடந்தது. சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு நேற்று மாலை 6.45. மணியளவில் பெயர்ச்சி ஆனார். இந்த நிகழ்வையொட்டி அர்ச்சகர் ராமசுப்பிரமணி தலைமையில் யாகவேள்வி தொடங்கியது. பின்னர் மாவலிங்கம் தலவிருட்சமாக உள்ள மூலவர் சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் பெயர் ராசிக்கு பரிகாரம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த வக்கிர பெயர்ச்சியையொட்டி கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் ஆவார்கள். இதில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் இன்ஸ்பெக்டருக்கு விருது வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலனின் சேவையை பாராட்டி சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் முள்ளிபள்ளம் கிராம மக்கள் சார்பில் விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முள்ளி பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, பேரூர் தி.மு.க. செயலாளர் சத்திய பிரகாஷ், ஜெனகை மாரியம்மன் கோவில் தல வரலாறு புத்தக வெளியீட்டாளர் ஜனகராஜ், ஜவுளிக்கடை அதிபர் மணி, அறக்கட்டளை நிறுவன தலைவர் செந்தூர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் செல்வி, பொதுச் செயலாளர் நாகுஆச்சாரி மற்றும் மன்னாடிமங்கலம், முள்ளி பள்ளம் அப்துல் கலாம் அறிவியல் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் மதுரை புறநகர் மாவட்ட கிளைஅலுவலகம் திறக்கப்பட்டது.

    ×