search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு
    X

    அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தபோது எடுத்த படம். 

    சோழவந்தான் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு

    • சோழவந்தான் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • சமுதாயக்கூடத்தில் பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மாநில நிதி ஆணைய மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.கோடி மதிபீட்டில் பஸ் நிலையம் கட்டி முடிக்கப் பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நிறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் நேற்று சமுதாயக்கூடத்தில் நடந்த பேரூராட்சி மாதாந்திர மன்ற கூட்டத்திற்கு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கண்ணம்மாள் பேரூராட்சி வரவுசெலவு உள்ளிட்ட 14 தீர்மானங்களை மன்றம் அங்கீகரிக்கக்கோரி வாசித்தார். இதில் 2-வது தீர்மானமான திறக்கப்படாத பேரூராட்சி பஸ் நிலையத் திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என பெயர் சூட்டப்படும் என்ற தீர்மானத்திற்கு பேரூராட்சி 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கணேசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதன் பின்னர் பஸ் நிலையத்திற்கு முதல்-அமைச்சர் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்கக்கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் கையொப்பமிட்டு மனுவை செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசினிடம் கொடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட தலைவர் ஜெயராமன் தி.மு.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் மெஜாசாரிட்டி பலம் உள்ள தால் பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்ட மன்றம் அங்கீகரிப்பதாக கூறியதையடுத்து பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கணேசன், வசந்தி ரேகா, சரண்யா, கணேசன், சண்முக ராஜா பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கோஷங்களை எழுப்பிதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில் 3-வது தீர்மானமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ெரயிவே மேம்பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்ட மன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×