முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம்

சோழவந்தான் பேட்டை அரசு நிலைப்பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம்
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு உணவுகளை பரிமாறினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் லலிதா பேபி வரவேற்றார். சமுதாய வள பயிற்றுனர் செல்வி, வரி தண்டலர்கள் வெங்கடேசன் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள் வேணுகோபால், கவுதம் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com