ராதாகிருஷ்ணா திருக்கல்யாணம்

ராதாகிருஷ்ணா திருக்கல்யாணம் நடந்தது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராதாகிருஷ்ணா திருக்கல்யாணம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் 8-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரகாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 2 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஹரே கிருஷ்ணா நாம பாராயணம் இதைத் தொடர்ந்து அஷ்டபதி பஜனை இரவு குரு கீர்த்தனைகள் நடந்தது. 2-ம் நாள் காலை உற்சவ விருத்தி பஜனை பெண்கள் சீர் எடுத்து வந்தனர். ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்று ஆஞ்சநேய உற்சவம் மங்கள ஆராத்தி நடைபெற்றது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது. பா.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா, கவுன்சிலர் வள்ளிமயில், லயன்ஸ் கிளப் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ண பக்த மகளிர் சபா மற்றும் விழா கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com