search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ராணுவம்"

    • சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்தது
    • ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் உடுருவும் சம்பவம் நடைபெறுவது உண்டு. ஆனால், இந்திய வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூஞ்ச் செக்டார் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது இரண்டு சிறிய ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக மூன்று ஊழியர்களை ஜம்மு-காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
    • சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர் சரண்யா. இவர் விரைவில் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பதவி ஏற்க உள்ளார்.

    இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர். மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டுமே ஆவார்.

    சரண்யா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ராணுவத்தில் சேருவதற்கு முன்பு அவர் விவசாய வேலைகளை பார்த்து வந்தார். கால்நடைகளையும் வளர்த்தார். கபடி வீராங்கனையும் ஆவார்.

    அவர் ராணுவ பயிற்சியில் சேர்ந்து 3 முறை தோல்வியை தழுவினார். இந்த முறை அவர் சாதித்து விட்டார்.

    இது தொடர்பாக சரண்யாவுக்கு பயிற்சி அளித்த கமாண்டர் கூறியதாவது:-

    சரண்யா அந்தியூர் பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவரது வீட்டை சுற்றி வனப்பகுதி உள்ளது. அவரது வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்துக்கு 20 கி.மீ. தூரம் மண் ரோட்டில் செல்ல வேண்டும். அந்த மண் ரோட்டில் கார் கூட செல்ல முடியாது. இதனால் அவர் பயிற்சிக்கு வருவதற்காக அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார். வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் தனியாக மண் ரோட்டில் 20 கி.மீ. தூரம் சென்று அங்கு ஒரு இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு 4 பஸ்கள் மாறி பயணம் செய்து காலை 7 மணிக்கு பயிற்சிக்கு வந்து விடுவார். சில நாட்கள் அவர் 7.05 மணிக்கு வருவார். அப்போது அவரை திட்டுவேன். ஆனால் அவர் இவ்வளவு சிரமப்பட்டு வருவதை ஒருநாள் கூட என்னிடம் சொன்னதில்லை. 5 நிமிடம் தாமதமாக வந்து நான் திட்டும்போது மன்னிப்பு கேட்டு விட்டு இனி சரியான நேரத்துக்கு வந்து விடுவதாக கூறுவார்.

    இந்த விஷயங்கள் எல்லாம் நான் அவரது வீட்டுக்கு சென்றபோதுதான் தெரிய வந்தது. அதையும் சரண்யா சொல்லவில்லை. அவரது தாயார் சொல்லித்தான் எனக்கு தெரியும். அவரது வீட்டுக்கு சென்றபோது பாதி தூரம்தான் காரில் செல்ல முடிந்தது. மீதி தூரம் நடந்தே சென்றோம்.

    சரண்யாவின் தாயார் என்னிடம் பேசியபோது, "சரண்யா அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார். அவர் எப்படி பயிற்சிக்கு செல்கிறார் என்பதே எனக்கு தெரியாது. 6 மாதமாக இப்படியே கஷ்டப்பட்டார். இவ்வளவு சீக்கிரம் எழுந்து செல்கிறாயே... உனது கமாண்டர் மனிதனா, மிருகமா? என்று திட்டி இருக்கிறேன்" என்றார். அதற்கு நான் சிரித்துக்கொண்டே அந்த கமாண்டர் நான்தான் என்றேன்.

    சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள். இவர்கள்தான் சிங்கப் பெண்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இரண்டு பேர் காயங்களுடன் உயிர்தப்பியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மூன்று ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர், ஆற்றில் விழுந்துள்ளது.

    இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிந்ததாகவும், இரண்டு பேர் காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்திய ராணுவத்தில் போர்முனைகளுக்கு செல்லும் பீரங்கி படையில் பெண் அதிகாரிகளும் இடம் பெறுகிறார்கள்.
    • பீரங்கி படையை பொறுத்த வரை போர் முனைக்கு சென்று தாக்குதலில் ஈடுபடுவது.

    சென்னை:

    மிக கடினமான ராணுவ பணியிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.

    இந்திய ராணுவத்தில் போர்முனைகளுக்கு செல்லும் பீரங்கி படையில் பெண் அதிகாரிகளும் இடம் பெறுகிறார்கள்.

    இந்த அதிகாரிகளுக்கான பயிற்சி சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் பயிற்சி பெற்ற 5 பெண் வீராங்கனைகள் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்து பீரங்கி படையில் பொறுப்பேற்க உள்ளார்கள்.

    பீரங்கி படையை பொறுத்த வரை போர் முனைக்கு சென்று தாக்குதலில் ஈடுபடுவது. இனி பெண் அதிகாரிகளும் பீரங்கி படையை போர்முனைக்கு வழி நடத்தி செல்வார்கள். இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் சேரும் முதல் அணியினர் இந்த 5 பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீராங்கனைகளின் வீரத்தையும் நெஞ்சுறுதியையும் கடினமான பயிற்சியை உறுதியுடன் மேற் கொண்டதையும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

    • இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
    • இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும்

    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், இந்த கொள்முதல் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.

    இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதாவது, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பில் 60 ஹெலிகாப்டர்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர, இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், இந்திய ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாங்கப்படும்.

    • இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை அனுப்பியுள்ளது.
    • சிரியாவின் அலெப்போ நகரில் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது.

    டமாஸ்கஸ்

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி ரிக்டர் 7.8 என்ற அளவில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது.

    நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்தும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது. இதில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு 'உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' என்ற கொள்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் சர்வதேச எல்லையை கடந்து இந்திய எல்லைக்குள் ஒரு மர்ம டிரோன் நுழைந்தது.
    • டிரோன் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் சர்வதேச எல்லையை கடந்து இந்திய எல்லைக்குள் ஒரு மர்ம டிரோன் நுழைந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட இந்திய எல்லைக் காவல்படை, அந்த டிரோனை சுட்டு வீழ்த்தியது. அப்போது அந்த டிரோன் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

    "பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள பாபாபிர் என்ற எல்லைக்கு அருகில் நேற்று முன்தினம் இரவில் அந்த டிரோன் நுழைந்ததாகவும், எல்லை காவல்படையினர் சுட்டதால், மீண்டும் அது பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி சர்வதேச எல்லையை தாண்டி விழுந்ததாகவும்' இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    • அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள்.
    • அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 4வது வருடம் அவர்களது சம்பளம் ரூ. 40,000 ஆக இருக்கும்.

    இந்நிலையில் அக்கினிபாத் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கி வசதிகளை அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்புத்துறை சம்பளத் தொகுப்பைப் போல இருக்கும் என்றும், கூடுதலாக, பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னிவீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழு ஈடுபடுகிறது.

    செர்ஜியேவ்ஸ்கி:

    பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சியான வோஸ்டாக் - 2022, ரஷியாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    இந்த முகாமில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.

    ராணுவ அம்சங்கள், செயல் முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து ரஷிய ராணுவத்தினருடன் இந்திய ராணுவ குழுவினர் பகிர்ந்து கொள்வார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
    • இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,

    ஸ்ரீநகர்:

    கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.

    இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.

    இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    • இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
    • நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

    ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் ஆகியவற்றை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

    இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    தந்தை வழியில் அபிலாஷா பாராக்கும் நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
    புது டெல்லி:

    இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார். 

    அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஓம் சிங் ஆவார். ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேருவதற்கு முன்னர் கேப்டன் அபிலாஷா, தொழில் ரீதியில் நிறைய ராணுவ படிப்புகளை படித்துள்ளார். 

    தந்தை வழியில் மகளும் நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
    ×