search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னி வீரர்கள்"

    • அக்னி வீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் ரெயில்வே வேலைவாய்ப்பில் வயது சலுகை வழங்கவும் ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது சலுகை வழங்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    லெவல் 1 பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படும்.

    மேலும், முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு வயது உச்சவரம்பில் 5 ஆண்டும், அதற்கடுத்த பேட்ச் அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டும் வயது தளர்வு அளிக்கப்படும். உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்தது.

    • அக்னிவீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களை வரவழைத்து உடல் தகுதியை நிரூபிக்க ஓட வைப்பார்கள். அதன்பிறகே எழுத்து தேர்வு நடைபெறும்.
    • தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் எழுத்து தேர்வும் அதில் தேறியவர்களுக்கு உடல் தகுதி தேர்வும் நடத்தப்படும்.

    சென்னை:

    ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தின்கீழ் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

    இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த 16-ந்தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது.

    திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். திருச்சி மற்றும் வேலூரில் தேர்வு நடைபெறும்.

    வழக்கமாக அக்னிவீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களை வரவழைத்து உடல் தகுதியை நிரூபிக்க ஓட வைப்பார்கள். அதன்பிறகே எழுத்து தேர்வு நடைபெறும்.

    ஆனால் தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் எழுத்து தேர்வும் அதில் தேறியவர்களுக்கு உடல் தகுதி தேர்வும் நடத்தப்படும்.

    அதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 17-ந்தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு மின் அஞ்சலில் அனுப்பப்படும்.

    ராணுவ பெண் போலீஸ் தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கு தகுதி உள்ள இளம் பெண்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    • அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள்.
    • அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 4வது வருடம் அவர்களது சம்பளம் ரூ. 40,000 ஆக இருக்கும்.

    இந்நிலையில் அக்கினிபாத் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கி வசதிகளை அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்புத்துறை சம்பளத் தொகுப்பைப் போல இருக்கும் என்றும், கூடுதலாக, பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னிவீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×