search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டு பயிற்சி"

    • பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும்.
    • களக்காடு தலையணையில் தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவுகிறது.

    பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவும் என்பதால் அதனை தடுக்க வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி களக்காடு தலையணையில் காட்டுத் தீ விபத்தை தடுப்பது குறித்து தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள், களக்காடு வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், தீ ஏற்படாமல் தடுப்பது பற்றியும் கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் கள பயிற்சியும் கொடுக்கப்பட்டது. நாங்குநேரி தீ அணைப்பு நிலைய அதிகாரி பாபநாசம், களக்காடு வனசரகர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் இந்தியா வருகை
    • இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் இதில் கலந்து கொள்கின்றன.

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே ஆஸ்த்ரா ஹிந்த் 22 என்ற ஆண்டுதோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 11 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் முதன்முறையாக இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய ராணுவத்தின் 2-வது பிரிவின் 13-வது படையைச் சேர்ந்த வீரர்கள் குழு ராஜஸ்தான் சென்றடைந்தது.

    நேர்மறையான ராணுவ உறவைக் கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் இணைந்து பணியாற்றும் திறனை ஊக்குவிப்பது முதலியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை இரு ராணுவங்களும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்தக் கூட்டு பயிற்சி வழங்கும்.

    இரு ராணுவங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் இயங்கு தன்மையை இந்த பயிற்சி ஊக்குவிப்பதோடு, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழு ஈடுபடுகிறது.

    செர்ஜியேவ்ஸ்கி:

    பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சியான வோஸ்டாக் - 2022, ரஷியாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    இந்த முகாமில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.

    ராணுவ அம்சங்கள், செயல் முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து ரஷிய ராணுவத்தினருடன் இந்திய ராணுவ குழுவினர் பகிர்ந்து கொள்வார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    ×