search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joint Exercise"

    • பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் இந்தியா வருகை
    • இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் இதில் கலந்து கொள்கின்றன.

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே ஆஸ்த்ரா ஹிந்த் 22 என்ற ஆண்டுதோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 11 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் முதன்முறையாக இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய ராணுவத்தின் 2-வது பிரிவின் 13-வது படையைச் சேர்ந்த வீரர்கள் குழு ராஜஸ்தான் சென்றடைந்தது.

    நேர்மறையான ராணுவ உறவைக் கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் இணைந்து பணியாற்றும் திறனை ஊக்குவிப்பது முதலியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை இரு ராணுவங்களும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்தக் கூட்டு பயிற்சி வழங்கும்.

    இரு ராணுவங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் இயங்கு தன்மையை இந்த பயிற்சி ஊக்குவிப்பதோடு, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டு கட்டங்களாக இந்த பயிற்சிகள் நடைபெற்றன.
    • இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இந்த பயற்சி மேம்படுத்தும்.

    பாக்லோ:

    இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ சிறப்பு படைகளின் வருடாந்தரப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி 12வது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது.  இதையடுத்து 13வது கூட்டுப் பயிற்சி இமாச்சலப் பிரதேச மாநிலம் பாக்லோவில் 21 நாட்கள் நடைபெற்று வந்தது. இன்றுடன் கூட்டுப்பயிற்சி நிறைவடைந்தது

    இந்தப் பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதல் கட்டத்தில் எதிர்ப்பை முறியடிப்பது, போர் தந்திர நிலையில் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவையும், இரண்டாவது கட்டத்தில் 48 மணி நேர மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பயிற்சியும் நடைபெற்றது. 


    இரு அணிகளும் கூட்டு பயிற்சியோடு திட்டமிடுதல், பல்வேறு ஒத்திகை நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சி குறித்து இரு நாடுகளின் படைகளும் திருப்தி தெரிவித்தன.

    தற்போதைய சர்வதேச அளவிலான சூழலில், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை கருத்தில் கொண்டு அமெரிக்க சிறப்பு படைகளுக்கு இந்த பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது,

    இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி, இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவை மேலும் வலுப்படுத்தும். அதேபோல் இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • இரு நாடுகளிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை.
    • தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி.

    இந்தியா மற்றும் ஓமன் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் நான்காம் கட்ட கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்குகிறது. வரும் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தானில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக ஓமன் ராணுவ பாராசூட் படையைச் சேர்ந்த 60 வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் சார்பில் இந்த பயிற்சியில் 18 வது காலாட் படையைச் சேர்ந்த வீரர்கள் குழு கலந்து கொள்கிறது.

    இந்தியா மற்றும் ஓமன் ராணுவங்களுக்கிடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவதையும் இந்தப் பயிற்சி இலக்காகக் கொண்டுள்ளது.

    தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகள், உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகள் உள்ளிட்டவை இந்த கூட்டுப் பயிற்சியில் இடம் பெறுகின்றன.

    ×