search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குளம்"

    • கால்நடை மருத்துவக் குழுவினரால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிறப்பாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள கடங்கனேரி கிராமத்தில் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருந்தகம் மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ் முன்னிலையில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருத்துவர் சந்திரன் மற்றும் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராம செல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் நடராஜன் ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினரால் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் நோயுற்ற கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், ஆடுகள் மற்றும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறப்பாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.

    • முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
    • சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மேலகிருஷ்ணபேரி ஊராட்சிக்குட்பட்ட முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
    • வாறுகாலில் உள்ள சாக்கடைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆலங்குளம் தாலுகா அலுவலக வளாகம், அதனை சுற்றியுள்ள மாறுகால் போன்ற பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் வாறுகாலில் உள்ள சாக்கடைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ராஜசேகரன், வரி வசூலர் திருமலை வடிவம்மாள், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • மருதம்புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஆலங்குளம்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆலடி அருணா அறக்கட்டளை, பொழில் அறக்கட்டளை மற்றும் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காளத்திமடம், புதுப்பட்டி, மருத்தம்புதூர் ஆகிய கிரா மங்களில் உள்ள குளங்களில் 2500 பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக காளத்திமடம், புதுப்பட்டி, மருதம்புத்தூர் பகுதியில் தி.மு.க. கிளை நிர்வாகிகள் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோரை மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் பாப்பாக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தி.மு.க. மகளிரணி அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா, புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால் விநாயகம், மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, நிர்வாகி சுதாகர், ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் மற்றும் சிவசுப்பிரமணியன், பாலாஜி, வில்லிசை கலைஞர் பரமேஷ்வரி, அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மருதம் புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர் மாரி வண்ண முத்து. ஊராட்சி தலைவர் பூசத்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • காசிநாதபுரம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை பணிகளை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி காசிநாதபுரம் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய சிமெண்ட் சாலை பணிகளை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால்விநாயகம், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகராம், புதுப்பட்டி கூட்டுறவு சங்கம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

    இதில் மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.
    • விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா விழாவுடன் தொடங்கியது. சனிக்கிழமை சிறுமிகளின் புஷ்பாஞ்சலி நடை பெற்றது. ஞாயிற்றுக்கிழமை 1,503 பெண்கள் பங்கு பெற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை யொட்டி காலை பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், பூ வளர்த்தல், பால்குடம் எடுத்தல், உச்சிகால பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் அக்னி குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தனர். இதில் பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் பக்தி பரவசத்துடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.

    விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கு தர்மகர்த்தா வும், முன்னாள் எம்.பி.யுமான ராமசுப்பு தலைமை தாங்கினார். திருவிழா வையொட்டி ஆலங்குளம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    • போட்டியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • 74 கிலோ எடை பிரிவில் சுதர்சன் தங்கப்பதக்கம் வென்றார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி கோவையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுதர்சன் என்ற கல்லூரி மாணவன் 74 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 125 கிலோ தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். எளிமையான குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவன் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

    மேலும் தற்போது ஆலங்குளம் தினசரி காய்கனி சந்தை மார்க்கெட்டில் இரவு நேரத்தில் வேலை பார்த்து கொண்டு வீரவநல்லூர் தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தில் இருந்து கடந்த 2 ஆண்டு காலமாக தினசரி காய்கனி சந்தையில் வேலை செய்து கொண்டு பயிற்சி பெற்று குறுகிய காலகட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆலங்குளம் காய்கனி சந்தை மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வருகை தந்தார். அவருக்கு தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் அழகு ட்ரைவ்-ன் ஓட்டல் அருகில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகரச்செயலாளர் நெல்சன், காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், மாவட்டபிரதிநிதி வாசு, மாறன், இளைஞரணி ரமேஷ், அத்தியூத்து கோமு, தளபதி முருகேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூர் செயலாளர்கள், தி.மு.க. மாநில, மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் நாடார் திருமண மண்டபத்தில் ஆலங்குளம் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கிளை செயலாளர்களுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆலங்குளம் நகர செயலாளர் சுப்பரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, ஆலங்குளம் நகர துணை செயலாளர் சாலமோன்ராஜா, ராமலிங்கம், புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பால் விநாயகம், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீரபாண்டியன், பூலாங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிக்சன், தங்கசாமி முத்தையா, தனபால், குமரன், செந்தில் முருகன். பெரியபாண்டியன், முத்துராஜ், ஐசக் சேகர், சத்தியராஜ் உள்பட அ.தி.மு.க. நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடங்கநேரி பஞ்சாயத்து ரெட்டியார் பட்டி கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வானைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் குகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் பள்ளியில் படிக்கும் 290 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி பாலகுமார், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், கிளை செயலாளர் கணேசன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜுலியா டெய்சி மேரி வரவேற்றார்.

    மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பங்கேற்று 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர்.

    இவ்விழாவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதி நிதிகள் சீ.பொன் செல்வன், முத்து ராஜ், பொறியாளர் அணி துணை அமைச்சர் சிவராஜன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், பெத்த நாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி, ஒன்றிய கவுன்சிலர் நாக ராஜன், இளைஞரணி கோமு, நிர்வாகிகள் தளபதி முருகேசன், தங்கச்சாமி, முயல், சீதாராமன், செந்தில், காளிமுத்து, மாரி முத்து, மோகன், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவ குமார், சச்சின், ஜெயக்குமார், ஓவிய ஆசிரியர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விஜயன் காட்டு பகுதியில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தார்.
    • தன்னுடன் மது குடித்த 2 பேருடன் விஜயன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்துள்ளார். தனது வேலையை முடித்துவிட்டு ஆலங்குளம் ஜோதி நகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.

    நகை கொள்ளை

    அங்கு மது வாங்கி கொண்டு அருகிலுள்ள காட்டு பகுதியில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் விஜயன் அருகில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர். இதில் அவர்கள் நண்பர்களாகி மேலும் விஜயனை குடிக்க வைத்துள்ளனர்.

    தொடர்ந்து அவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்ற போது திடீரென மேலும் 3 பேர் வந்துள்ளனர். 6 பேரும் சேர்ந்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயன் கழுத்தில் வைத்துக் கொண்டு கழுத்தில் இருந்த 22 கிராம்செயின், கை செயின் 20 கிராம், மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த அவரது மகனின் 120 கிராம் வெள்ளி கொடி, 40 கிராம் எடை கொண்ட 2 வெள்ளி கை செயின், ரொக்கம் 60 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அவரது மோட்டார் சைக்கிள் சாவியையும் எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்த தப்பியோடி விட்டது.

    தனிப்படை விசாரணை

    இச்சம்பவம் குறித்து விஜயன் ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். அதன் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயன் தன்னுடன் சேர்ந்து மது குடித்த 2 பேருடன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் அவரிடம் நகைகளை பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒரு மாத காலத்திற்குள் வேறு பணியிடத்திற்கு சென்று விட்டார். புதிய போலீசார் இங்கு இல்லை என கூறப்படுகிறது. இதனால் ரோந்துபணியில் ஈடுபடுவது இப்பகுதியில் குறைந்துள்ள காரணத்தால் குற்ற சம்பவங்கள் பெருகி வருவதாகவும், இதனை தடுக்க போதிய காவலர்களை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×