search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே ரூ. 7 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை- யூனியன் சேர்மன் அடிக்கல் நாட்டினார்
    X

    நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் புதிய சிமெண்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டியதையும், பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதையும் படத்தில் காணலாம்.

    ஆலங்குளம் அருகே ரூ. 7 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை- யூனியன் சேர்மன் அடிக்கல் நாட்டினார்

    • காசிநாதபுரம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை பணிகளை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி காசிநாதபுரம் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய சிமெண்ட் சாலை பணிகளை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால்விநாயகம், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகராம், புதுப்பட்டி கூட்டுறவு சங்கம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பள்ளி மாணவர்களுடன் திறந்து வைத்தார்.

    இதில் மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×