search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா"

    பாரதிய ஜனதா தலைவர்கள் யாரேனும் 10 பேரால் கற்பழிப்புக்கு உள்ளானால் அவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சம் வழங்குவேன் என அரியான ஆம் ஆத்மி தலைவர் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். #RewariRapeCase #AAP
    சண்டிகர் :

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கற்பழித்தனர்.

    அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் நாடுமுழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பா.ஜ.க தலைமையிலான அரியானா அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கியது. ஆனால், எங்களுக்கு நீதி தான் முக்கியம் இழப்பீடு அல்ல என அந்த தொகையை திரும்ப அளிக்க மாணவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வெறும் ரூ. 2 லட்சம் வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே பாரதிய ஜனதா தலைவர்கள் யாரேனும் 10 பேரால் கற்பழிப்புக்கு உள்ளானால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சத்தை நான் வழங்குவேன் என அம்மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் நவீன் ஜெய்ஹிந்த் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து, அவரை தொடர்பு கொண்டு பேசிய ஊடகங்களிடம் தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ நான் கூறிய கருத்தில் நான் உறுதியாக உள்ளேன், சமூகத்தில் பெண்களை அவமதிக்க கூடாது.

    பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் நீதியை கேட்கிறார்கள். ஆனால், அரசு ரூ.2 லட்சத்தை அவர்களின் கைகளில் திணித்துள்ளது, அதை அவர்கள் திரும்ப அளிக்க போவதாக கூறியுள்ளனர். அரசின் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பானது.

    அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இவற்றை கண்டும் காணாமல் இருப்பது போல் முதல்வர் உள்ளார். மாநில அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. இங்கு கௌரவர்களின் ஆட்சி நடைபெருவது போல் உள்ளது. முதல்வர் துரியோதனனை போன்று நடந்து கொள்கிறார் ’ என அவர் தெரிவித்தார். #RewariRapeCase #AAP
    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ராணுவ வீரர் உள்பட தேடப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி,  கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை இன்று நேரில் சந்தித்த எஸ்.பி. நஷ்னீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருவதாகவும், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் எஸ்.பி நஷ்னீன் கூறினார்.

    இந்நிலையில், மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு ராணுவ வீரர் உள்பட மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் (இடமிருந்து வலமாக) மனிஷ், நிசு மற்றும் ராணுவ வீரர் பன்கஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Rewari #RewariRapeCase 
    அரியானாவில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவியை 3 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Haryana
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, நேற்று முன் தினம் கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த மூன்று பேர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாத நிலையில், குற்றவாளி தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
    2010-ம் ஆண்டு தலித் தந்தை - மகள் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ்கோர்ட்டு விடுவித்த 20 பேரை குற்றவாளி என அறிவித்த ஐகோர்ட் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #MirchpurDalitKilling #DelhiHC
    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜாட் இனத்தவர்களுக்கும் தலித் இனத்தவர்களுக்கும் நடந்த மோதலில், மிர்ச்பூர் கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பு ஜாட் பிரிவினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில், 70 வயது நபர் அவரது 16 வயது மாற்றுத்திறனாளி மகள் எரித்து கொல்லப்பட்டனர்.

    சுப்ரீம் கோர்ட் தலையிட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை டெல்லிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 103 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் 5 பேர் சிறுவர்கள். வழக்கு விசாரணையின் போதே ஒருவர் இறந்து விட்டார்.

    கடந்த 2011 செப்டம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி விசாரணை கோர்ட், மொத்தமுள்ள 97 பேரில் 15 பேரை தண்டித்தும், 82 பேரை விடுவித்தும் உத்தரவிட்டது. தண்டிக்கப்பட்ட 15 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட், திட்டமிட்டே தலித் குடியிருப்புகள் எரிக்கப்பட்டுள்ளது என கூறி 15 பேரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கீழ்கோர்ட் விடுவித்த 82 பேரில் 20 பேரை குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
    ஜம்மு காஷ்மீர், பீகார், அரியானா, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #Governors #PresidentKovind
    புதுடெல்லி:

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நரிந்தர்நாத் வோஹ்ரா கவர்னராக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டே வந்தது. சமீபத்தில் அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இதனால், வோஹ்ரா கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

    பீகார் மாநிலத்தின் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் எம்.பி லால் ஜி டாண்டன் பீகாரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா கவர்னராக இருந்த கங்கா பிரசாத் சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரிபுரா கவர்னராக இருந்த டதாகடா ராய் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக இருந்த காப்தன் சிங் சோலாங்கி திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக சத்யதேவ் நாராயன் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில கவர்னராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர். 
    அரியானா மாநிலத்தில் மசாஜ் பார்லரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 15 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
    சண்டிகர் :

    அரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் உள்ள மசாஜ் பார்லர் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்த பார்லரில் சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு குருகிராம் போலீஸ் ஆணையர் கே.கே ராவ் அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, 29-வது செக்டாரில் உள்ள குறிப்பிட்ட மசாஜ் பார்லரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெண்கள், தென்கொரியாவை சேர்ந்த ஒரு பெண், மணிப்பூரை சேர்ந்த 5 பெண்கள், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 4 ஆண்கள் என 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், இரவு விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கைதான வெளிநாட்டை சேர்ந்தவர்களில் யாரேனும் விசா முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியுள்ளனரா என்பதையும் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அரியானா மாநில காவல்துறையில் ஒய்வு பெற்ற 1000 ராணுவ வீரர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    சண்டிகர் :

    அரியானா மாநிலம், கூர்கான் போலீஸ் சரக பகுதியில் இரவு நேரங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிராக குற்றங்களை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற 1000 ராணுவ வீரர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

    அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேர பணிகளுக்கு மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

    ராணுவத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கைகள், உடற்தகுதி இல்லாமை போன்றவற்றால் பணியை விட்டு நீக்கப்படாத 25 முதல் 50 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு மாத ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றால், அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது.
    சண்டிகர்:

    அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் அம்மாநில விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டது.

    விளையாட்டு வீரர்கள், எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், ராணுவம், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பரிசு வென்றால் அவர்களுக்கான பரிசுத்தொகையை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.



    ஒரு வீரர் பதக்கம் வெல்லும் போது சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கான மாநில அரசின் பரிசுத்தொகையை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியானா அரசின் இந்த முடிவுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் ஒரு பங்கை அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற அரியானா அரசு உத்தரவை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ரத்து செய்துள்ளார்.
    சண்டிகர்:

    அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விளையாட்டு துறையை மேம்படுத்தும் ஒரு பகுதியாக அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டது.

    விளம்பர வருவாய், தொழில்முறை போட்டிகளில் வரும் வருமானத்திலும் பங்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை என்பதால் அவர்களை இந்த திட்டமானது பாதிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், விளையாட்டு துறையின் இந்த உத்தரவை அம்மாநில முதல்வர் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதியிட்ட அந்த அரசு உத்தரவை நிறுத்தி வைக்க தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 22 பதக்கங்கள் வென்று அசத்தினர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை குறைக்க மாநில அரசு திட்டமிட்டது. 

    இதன்காரணமாக வீரர்கள் அந்த விழாவில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #HaryanaGovt #SportsDevelopmentFund
    அரியானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் அனைத்தும் மாணவர்களும் தோல்வியடைந்தை அடுத்து ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் உள்ள தீகோட் அரசு பள்ளியில் 51 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த தேர்வை எழுதிய 51 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து பல்வால் மாவட்ட கல்வி அதிகாரி சுமன் நைன் கூறுகையில், அரசு பள்ளியில் மாணவர்களின் மோசமான மதிப்பெண்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அரியானாவில் உள்ள அனல்மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Haryana #blast #powerplant
    சண்டிகர் :

    அரியானா மாநிலம் கேடார் மாவட்டத்தில் உள்ள ராஜிவ்காந்தி அனல்மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் யுனிட்-1 நேற்று மூடப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் கொதிகலன்களின் அடிப்பகுதியில் ஏற்பட்ட கசிவை சரி செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் விக்ரம் மற்றும் அமிட் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மின்சார உற்பத்தி நிலையம் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து, வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Haryana #blast #powerplant
    ×