search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு பெற்ற 1000 ராணுவ வீரர்களை காவல்துறையில் பணியமர்த்த அரியானா அரசு முடிவு
    X

    ஓய்வு பெற்ற 1000 ராணுவ வீரர்களை காவல்துறையில் பணியமர்த்த அரியானா அரசு முடிவு

    அரியானா மாநில காவல்துறையில் ஒய்வு பெற்ற 1000 ராணுவ வீரர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    சண்டிகர் :

    அரியானா மாநிலம், கூர்கான் போலீஸ் சரக பகுதியில் இரவு நேரங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிராக குற்றங்களை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற 1000 ராணுவ வீரர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

    அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேர பணிகளுக்கு மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

    ராணுவத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கைகள், உடற்தகுதி இல்லாமை போன்றவற்றால் பணியை விட்டு நீக்கப்படாத 25 முதல் 50 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு மாத ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×