search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jat"

    அனுமன் ‘ஜாட்’ சமுதாயத்தை சேர்ந்தவர் என்று உத்தரபிரதேச மந்திரி லட்சுமிநாராயண் சவுத்ரியோ கூறியுள்ளார். #BJP #LaxmiNarayanChaudhary #JAT
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் ஒரு தலித் என்று கூறினார். அதே மாநிலத்தை சேர்ந்த எம்.எல்.சி. புக்கல் நவாப், அனுமன் ஒரு முஸ்லிம் என்றார். இப்போது அம்மாநில மந்திரி லட்சுமிநாராயண் சவுத்ரியோ அனுமன் ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

    ஜாட் சமுதாயத்தினர் அனுமனின் சந்ததியர். ராமனின் மனைவி சீதா, ராவணனால் கடத்தப்பட்டார். ஆனால் இலங்கை அனுமனால் கொளுத்தப்பட்டது. சிலர் வேறு சிலருக்கு அநீதி இழைத்தால் 3-வது நபர் அவர்கள் இருவரையும் தெரியாதவராக இருப்பார். யாருக்கு எப்போது அநீதி இழைக்கப்பட்டாலும் அவர்கள் தலையிடுவார்கள். இதுதான் ஜாட் சமுதாயத்தினரின் வழக்கம் என்று அவர் விளக்கமும் கூறினார். #BJP #LaxmiNarayanChaudhary #JAT
    2010-ம் ஆண்டு தலித் தந்தை - மகள் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ்கோர்ட்டு விடுவித்த 20 பேரை குற்றவாளி என அறிவித்த ஐகோர்ட் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #MirchpurDalitKilling #DelhiHC
    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜாட் இனத்தவர்களுக்கும் தலித் இனத்தவர்களுக்கும் நடந்த மோதலில், மிர்ச்பூர் கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பு ஜாட் பிரிவினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில், 70 வயது நபர் அவரது 16 வயது மாற்றுத்திறனாளி மகள் எரித்து கொல்லப்பட்டனர்.

    சுப்ரீம் கோர்ட் தலையிட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை டெல்லிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 103 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் 5 பேர் சிறுவர்கள். வழக்கு விசாரணையின் போதே ஒருவர் இறந்து விட்டார்.

    கடந்த 2011 செப்டம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி விசாரணை கோர்ட், மொத்தமுள்ள 97 பேரில் 15 பேரை தண்டித்தும், 82 பேரை விடுவித்தும் உத்தரவிட்டது. தண்டிக்கப்பட்ட 15 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட், திட்டமிட்டே தலித் குடியிருப்புகள் எரிக்கப்பட்டுள்ளது என கூறி 15 பேரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கீழ்கோர்ட் விடுவித்த 82 பேரில் 20 பேரை குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
    ×