search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்"

    • சி.டி.ஸ்கேன் வசதிகளுடன் பிரைட் சூப்பர் ஸ்பெஷா லிட்டி என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.
    • டாக்டர் எஸ்.சொக்கலிங்கம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர்.

    விழாவில் திரு.வி.க.நகர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., தாயகம் கவி, மருத்துவமனை நிறுவனர் எஸ்.சீனிவாசன், நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.சொக்கலிங்கம் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பிரைட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.சொக்க லிங்கம் கூறுகையில், முத்து மருத்துவமனை என்ற பெயரில் 14 ஆண்டுகளாக இயங்கி வந்த இம்மருத்துவ மனையில், தற்போது எக்மோ, ஆஞ்சியோ பிளாஸ்டிக் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், 20 படுக்கை கொண்ட நவீன தீவிர சிகிச்சைப்பிரிவு, சி.டி.ஸ்கேன் வசதிகளுடன் பிரைட் சூப்பர் ஸ்பெஷா லிட்டி என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது.

    இங்கு இதுவரை 13 கிட்னி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகளும் உள்ளது. மற்ற தனியார் மருத்துவமனையை காட்டிலும் 50 முதல் 70 சதவீதம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு மாதம் ஆயிரம் பேருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. குறிப்பாக அரசு காப்பீடு திட்டத்தில் எண்ணற்றவர்களுக்கு இங்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.

    • கமுதியில் ரூ. 2.97 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ேசர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே உள்ள கோவி லாங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ரூ.2.97 லட்சம் மதிப்பிலான புதிய கட்டி டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங் கம், மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை கார்லின் வரவேற்று பேசி னார். தெற்கு ஒன்றிய செய லாளர்

    மனோகரன், தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், துணை தலைவர் துரைப் பாண்டி, பள்ளி மேலாண் மை குழு தீபா காளிமுத்து, வட்டார வளமைய மேற் பார்வையாளர் ஸ்ரீராம், இல்லம் தேடி கல்வி ஒருங் கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கோவிலாங்குளம் ராமமூர்த்தி, செந்தில், வழி விட்டான், ஜெயராஜ், முத்து ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ேசர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.

    • 2,394 பயனாளிகளுக்கு ரூ.20.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
    • கிராமங்களை பொறுத்தவரை வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை மிக முக்கியமான பங்களிப்பாக இருந்து வருகின்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் ராஜகண்ணப் பன் கொடி ஏற்றி வைத்து சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர் கலைஞர். அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் தான் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டு தற்பொழுது சிறந்து விளங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி பெண்களுக்கு சொத்து உரிமை பெற்று தந்தவர் கலைஞர். தற்பொழுது பெண்களுக்கு சம உரிமை தந்து சாதனை படைத்தவர் முதல்-அமைச்சர் தான்.

    மேலும் பெண்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான அரசு நலத்திட்ட உதவிகள், மாதாந்திர உதவித் தொகை, கட்டணமில்லா பஸ் வசதி என எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். கிராமங்களை பொறுத்தவரை வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை மிக முக்கியமான பங்களிப்பாக இருந்து வருகின்றது. இத்தகைய துறையே மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக இத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் 184 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான விவசாய கடன், தொழில் கடன், நகை கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்ட உதவிகள் வழங்கி வருவதுடன், மாவட்டத்தில் 745 நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு தேவை யான உணவு பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டுறவு வார விழா தொடர்பான உறுதிமொழி அமைச்சர் ராஜகண்ணப்பன் தலை மையில் மேற்கொள்ளப் பட்டது. அதனை தொடர்ந்து 2,394 பயனாளிகளுக்கு ரூ.20.70 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மனோ கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
    • முன்பதிவு செய்துள்ள பயணிகளி டையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் அவரவர் சொந்த ஊர்களுக்கும், பணிபுரியும் இடத்திற்கும் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது.

    அதேவேளையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தீபாவளியை கொண்டாட சொந்தஊர் சென்ற பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் ஊர் திரும்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்திய தோடு, அதனை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி யும் வருகிறார்.

    அந்த வகையில் மதுரை பைபாஸ் கிளை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று பொது விடுமுறை என்பதால் ஏராளமானோர் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண் டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிக ளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். டிக்கெட் கட்டணம் குறித்த தகவல்களையும் அதிகாரிக ளிடம் கேட்டார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய் தார்.

    மேலும் அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்பதிவு செய்துள்ள பயணிகளிடையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகா ரிகள் உடனிருந்தனர்.

    • நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட மேல்பாரத் நகர் பகுதியை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குன்னூர், கல்குழி மேல்பாரத் நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சேதம் அடைந்துள்ளது.

    பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் உள்ள 8 குடும்பங்களைச் சேர்ந்த 23 நபர்கள் அருகில் உள்ள நிவாரண முகாமான மேல்பாரத் நகர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், மளிகை பொருட்களும், போர்வை, பெட்சீட் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் சார்பில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மழை காரணமாக மேல்பாரத் நகர் பகுதியில் சேதம் அடைந்த தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சீர் செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் ராமச்சந்திரன் நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமார மங்கலம், ஆறுமுகம், வட்ட வழங்கல் அலுவலர் வசந்த்குமார், பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசுன், துணை தலைவர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை கிழக்கு தொகுதியில் 78 புதிய சாலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.
    • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 1-வது மண்டல அலுவல கத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா,மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநக ராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி கலெக்டர் சவுந்தர்யா, மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதி வாளர் குருமூர்த்தி, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ. டாக்டர் சரவணன், டி.ஆர்.ஓ. சக்திவேல், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர்கள் ரோகினி பொம்மத்தேவன், செல்வ கணபதி, ராமமூர்த்தி, பால் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதே இந்த அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இந்த தொகுதியில் ஒரு கோடியே ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக 78 சாலைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் நடை பெறும். விடுபட்ட பகுதிகளில் 200 மீட்டர் பாதாள சாக்கடை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.

    எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் மக்கள் திட்டங்களை நிறைவேற்று வதில் மிகுந்த அக்கறை உள்ள அரசாக முதல்வர் மு. க. ஸ்டாலினின் அரசு இருக்கிறது.

    மேலமடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப் பட்டு புதிய சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கிழக்கு தொகுதியில் உள்ள 7 கண்மாய்களில் நடை பாதை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த பணிகளும் நடைபெற உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மக்களின் தேவையை அறிந்து பணி செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தி.மு.க. பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், பகுதி செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் - கட்டனூர் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் அமைந்துள்ள மறையூர் கழுங்கு பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இதனை யடுத்து பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக உயர் மட்ட பாலம் அமைக்க திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மறையூர் - கட்டனூர் சாலையில் சுமார் ரூ.69 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இந்த ஆய்வின் போது நரிக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில்,ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி வளர்ச்சி ஆணையர், புதுடில்லி மற்றும் கைத்தறி ஆணையர் சென்னை ஆகியோர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் இன்று (3-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை மாவட்ட அளவிலான 6-வது சிறப்பு கைத்தறி கண்காட்சி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.

    கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

    கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பெட்ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விற்பனைக்கு தமிழக அரசின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.150 வரை), பட்டு ரகங்களுக்கு ரூ.300-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பட்டு ரகங்களுக்கு சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகின்றது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு துணிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    • தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருகிறது.
    • கழனிவாசல் பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற் குட்பட்ட கழனிவாசல் பகுதி யில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென அடிக்கல் விழா நடந்தது. காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த னர். அதனை தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி பேசிய தாவது:-

    முதலமைச்சரால் 2021-2022-ம் ஆண்டின் சட்டப்பேரவை நிதி அறிக்கையின் கீழ் மாநிலம் முழுவதும் விளையாட்டு திறனை விரிவு படுத்துகின்ற வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளி யிட்டார்கள். அதன்படி, முதற்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத் திற்குட் பட்ட கழனிவாசல் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2½ ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளார்கள். சொன் னதை செய்தது மட்டுமன்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் தமிழகத்தில் முதல்-அமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.

    கல்வி, சுகாதாரம், தொழில் துறை, வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்கிடும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகள், அனைத்து விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி விளையாட்டு துறையை முதல்-அமைச்சர், விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஊக்குவித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட விளை யாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சொக்க லிங்கம், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    • மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    தர்மபுரி, தேனி, திருவாரூர், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை முடித்துக் கொண்டு குமரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

    இதனால் அவருக்கு குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க.வின் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியை போன்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் இன்று கலந்து கொண்ட நூலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

    துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, ஒன்றிய செயலாளர் மதியழகன், சுரேந்திரகுமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என் சங்கர், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிவபெரு மான், அழகியபாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன், தி.மு.க. இளைஞரணி தோவாளை ஒன்றிய துணை அமைப்பாளர் எட்பெர்க், தேரேகால்புதூர் ஊராட்சி தலைவர் சோமு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் வக்கீல் சிவராஜ், டாக்டர் சபி, மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், மருத்து வரணி நிர்வாகிகள் டாக்டர் வள்ளுவன், டாக்டர் சுரேஷ் பிள்ளை, டாக்டர் சுதாகர், டாக்டர் கிங்ஸ்லி செல்வக்குமார், பெர்லிங்ஸ்டன், பிரவின், ரஞ்சித் சிங், மாவட்ட அயலக அணி தலைவர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், முன்னாள் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், அகஸ்தீஸ் வரம் தெற்கு ஒன்றிய செய லாளர் பாபு, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்த குமாரி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குமரி கிழக்கு மாவட்ட மீனவரணி மாவட்ட தலைவர் ஆன்றனி ராஜ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பத்மநாபபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூ ராட்சி தலைவர் நசீர், அனுகிரஹா தொண்டு நிறுவன நிறுவனர் சதீஷ் குமார்

    • மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் அறிக்கை
    • மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கவும், இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க. மாநில அயலக அணி துணை செயலாளர் பாபு வினிபிரட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை(28-ந்தேதி) குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    குறிப்பாக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கவும், இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தி.மு.க. பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு வரவேற்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெற்குப்பையில் ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
    • நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19 வருடங்களாக ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தி.மு.க. மாவட்ட மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான

    கே.ஆர்.பெரிய கருப்பன் தன் சொந்த நிதியிலிருந்து ஆயுத பூஜை தினத்தன்று சீருடை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் அமைச்சர் ஏற்பட்டில் இந்த வருடம் நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர்களுக்கு நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் முத்தழகு, இளைஞர் அணி அமைப்பாளர் பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், வட்டச் செயலாளர் மாணிக்கம், கவுன்சிலர் வெள்ளைச்சாமி, ஒன்றிய பிரதிநிதி முத்து, தகவல் தொழில்நுட்ப அணி முருகேசன், மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீரமணி மற்றும் ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

    ×