search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்கம்
    X

    சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்கம்

    • சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி வளர்ச்சி ஆணையர், புதுடில்லி மற்றும் கைத்தறி ஆணையர் சென்னை ஆகியோர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் இன்று (3-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை மாவட்ட அளவிலான 6-வது சிறப்பு கைத்தறி கண்காட்சி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.

    கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

    கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பெட்ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விற்பனைக்கு தமிழக அரசின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.150 வரை), பட்டு ரகங்களுக்கு ரூ.300-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பட்டு ரகங்களுக்கு சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகின்றது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு துணிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    Next Story
    ×