search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுராக் தாக்கூர்"

    • ராகுல் காந்திக்கு இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லையா என மத்திய மந்திரி கேள்வி எழுப்பினார்.
    • டோக்லாமில் ஆக்கிரமிப்புக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். போர் வெடித்தால் அவர்கள் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி 1962-ம் ஆண்டிலேயே வாழ்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அனுராக் தாக்கூர் கூறியதாவது:

    காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுக்கு பனி பூட்ஸ் மற்றும் சூட்கள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அல்லது போர் விமானங்கள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

    ராகுல் காந்தி இன்னும் 1962-ம் ஆண்டு சகாப்தத்திலேயே வாழ்கிறார். இந்திய ராணுவத்தை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்துவதில் ஈடுபட வேண்டாம் என அவரிடம் கூறவிரும்புகிறேன். இந்திய ராணுவத்தின் மன உறுதியை வீழ்த்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதா? அல்லது ராகுல் காந்திக்கு இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லையா?

    பயங்கரவாதத்தின் வேரைத் தாக்க இந்திய வீரர்கள் வெற்றிகரமாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினர். டோக்லாமில் ஆக்கிரமிப்புக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம்.

    பாதுகாப்புப் படைகள் வலிமையானதாகவும், எந்தச் சூழ்நிலையிலும் இந்தியாவைக் காக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளன என தெரிவித்தார்.

    • கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி.
    • அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் கேலோ இந்தியா போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகின்றன. கேலோ இந்தியா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் வெளிப்படையான தேர்வு மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இது குறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில், சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு பயிற்சி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 விளையாட்டுப் பிரிவுகளில் 2,841 வீரர்கள் இந்திய வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உத்தரப்பிரதேசத்தில் 30 விளையாட்டுக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி.
    • விளையாட்டு வீரர்கள் வெளிநாடு பயிற்சி முகாம்களில் பங்கேற்க அரசு நிதி வழங்குகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளதாவது:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கேலோ இந்தியா மையம் ஒன்றுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதித்துள்ளது. அம்மாநிலத்தில் மேலும் 23 பன்னோக்கு விளையாட்டு அரங்குகள் உட்பட 30 விளையாட்டுக் கட்டமைப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி முகாம்கள் உட்பட விளையாட்டுக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகத் தரத்திலான பயிற்சி வசதிகளுக்குப் போதிய நிதியை அரசு வழங்குகிறது.

    கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான உதவி, ஒலிம்பிக் மேடை இலக்கு, இந்திய விளையாட்டுகள் ஆணையத்தின் விளையாட்டுகள் மேம்பாடு போன்ற திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப் படுகிறது. பெறப்பட்ட கோரிக்கை மற்றும் முன்மொழிவுகள் அடிப்படையில் அவற்றின் தொழில்நுட்ப சாத்தியம் மற்றும் திட்ட வழிகாட்டுதல்கள் மூலம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆன்மீக தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
    • காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அழைத்து வருவார்கள்.

    வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்க கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், கூறியுள்ளதாவது:

    காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி, பிரதமரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500 பேர் காசிக்கு வருகின்றனர். காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் காசிக்கு அழைத்து வருவார்கள். எனவே இது ஆரம்பத்தான்.

    காசி தமிழ் சங்கமம் பற்றி இதற்கு முன்பு யாரும் யோசிக்கவில்லை. காசியுடன் தொடர்புடைய தென்காசி உள்பட தமிழகத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இந்த தொடர்புகள் பிரதமரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. காசியுடன் தொடர்புடைய தமிழக பகுதிகளுக்கு உத்தரபிரதேச மக்கள் செல்ல வேண்டும். தமிழகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்.
    • பாதுகாப்பு, சுற்றுலா துறைகளிலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னைக்கு அருகே தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் ட்ரோன் பயிற்சி ஆய்வகத்தை தொடங்கி வைத்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் உரையாற்றினார். அவர் கூறியுள்ளதாவது:

    ட்ரோன் தொழில்நுட்ப பயன்பாடு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானது. தற்போது அனைத்து துறையிலும், இந்த தொழில்நுட்பம் மாற்றாக உருவெடுத்து வருகிறது. விவசாயத்துறையில் இதன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. பூச்சிமருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. 


    பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகளை நாடு முழுவதும் கொண்டு சென்று விநியோகிப்பதில் ட்ரோன்கள் பெரும் பங்கு வகித்தன. விவசாயத்துறைக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு, சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படும். ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும். இதற்காக அடுத்த ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ட்ரோன் பைலைட்டுகளை தயார்படுத்த வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நுட்பமான சினிமா உலகத்தை மிக அழகாவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியது.
    • அனைவரையும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல் புத்தம் புதிய சிந்தனைகளை வளர்த்துள்ளது.

    கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் உரை ஆற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது:

    திரைப்பட திருவிழா, வயது வித்தியாசம் இன்றி இளைஞர்கள், பெரியவர்கள், புதியவர்கள் மற்றும் ஜாம்பவான்கள் போன்றவர்களுக்கு நுட்பமான சினிமா உலகத்தை மிக அழகாவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியது. அனைவரையும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல் புத்தம் புதிய சிந்தனைகளை வளர்த்துள்ளது.

    உலகெங்கிலும் உள்ள படைப்பாற்றல் சிந்தனையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களை ஒரே கூரையின் கீழ் இந்த விழா ஒன்றிணைத்தது. வசுதேவ குடும்பகம் என்ற பன்முகத் தன்மை இந்த விழா மூலம் நிரூபிக்கப்பட்டது.

    இந்தியாவில் எப்போதுமே பலவிதமான திறமைகள் உண்டு. தங்கு, தடைகளுமின்றி பார்வையாளர்கள் கண்டு வெற்றியை தீர்மானிக்கும் வாய்ப்பு தேவைப்பட்டது .பிராந்திய மொழி சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் வலுவான முக்கியத்துவம் அளித்து, அதன் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்கினோம்.

    இந்தியாவில் மிகச்சிறந்த திரைப்படங்களை எடுக்கும் சூழலை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். திரைப்படத் தயாரிப்பில் இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

    • சிபிஐ சோதனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்.
    • அரசியல் ரீதியாக போராட ராஷ்டிரிய ஜனதாதளம் அழைப்பு.

    மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இதையடுத்து சிசோடியா, டெல்லி கலால் துறை அதிகாரிகள், மதுபான நிறுவன நிர்வாகிகள், டீலர்கள், ஊழியர்கள் உள்பட 15 பேர் மீது சிபிஐ தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிபிஐ சோதனை நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறியுள்ளதாவது: சிபிஐ குழு, எனது வீட்டை சோதனை செய்து எனது கணினி மற்றும் தொலைபேசியை கைப்பற்றினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர், தொடர்ந்து ஒத்துழைப்போம். நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சிசோடியா விட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகளை மத்திய அரசு குறி வைப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். 


    டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளதை ராஷ்டிரிய ஜனதாதளம் விமர்சித்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி போராட முன் வர வேண்டும் என்று அக்கட்சியின் எம்பி மனோஜ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, டெல்லி மதுபான கடை உரிமம் வழங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். 


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட அன்றே டெல்லி அரசு, மதுக் கொள்கையை வாபஸ் பெற்றதாகவும், ஒரு ஊழல்வாதி தன்னை நிரபராதி என்று நிரூபிக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர் ஊழல்வாதியாகவே இருப்பார் என்றும், அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

    • பயிற்சியாளர் வெளியேற்றத்தால், குத்துசண்டை வீராங்கனையின் பயிற்சி தடைபட்டது.
    • பயிற்சியாளருக்கு உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டியில் மகளிருக்கான குத்துச் சண்டை பிரிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்து  லவ்லினா போர்கோஹைன் பங்கற்றுள்ளார். இந்நிலையில் காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் சந்தியா குருங் வெளியேற்றப்பட்டு விட்டார் என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

    தமது பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு காமன்வெல்த் அதிகாரிகள் தடை விதித்ததாகவும் இதனால் தமது பயிற்சி தடைபட்டுள்ளதுடன், மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த பிரச்சினையில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்தாக்கூர், குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைனின் தனிப்பட்ட பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டி நடைபெறும் பகுதிக்குள் நுழைவதற்கான உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதியை குத்துச் சண்டை பயிற்சியாளர் சந்தியாவுக்கு குருங்கிற்கு வழங்க இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள 12 குத்துச்சண்டை வீரர்களுக்கு (8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள்) 4 துணை ஊழியர்கள் (உட்பட) பயிற்சியாளர்கள், பர்மிங்காம் நகருக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • போலியான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்வோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
    • கொரோனா தொற்று தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்க்க பிஐபியின் பிரத்யேக பிரிவு உருவாக்கம்

    புதுடெல்லி:

    இணையத்தில் போலி செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அளித்த பதில் வருமாறு:-

    இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்வதன் மூலமும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

    2021-2022 காலகட்டத்தில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 யுஆர்எல்-கள் முடக்கப்பட்டுள்ளன.

    கொரோனா தொற்று தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் 2020ம் ஆண்டு மார்ச் 31 அன்று உருவாக்கப்பட்டது. இதில் மக்கள் கொரோனா தொடர்பான தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம். கொரோனா தொடர்பான கேள்விகள் உட்பட 34,125 கேள்விகளுக்கு இந்த பிரிவு பதில் அளித்துள்ளது.

    இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

    • திருத்தப்பட்ட திட்டங்களுக்கான இணையதளம் அறிமுகம்.
    • எந்தவொரு விளையாட்டு வீரரும் மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் டெல்லியில் தொடங்கி வைத்தார்.

    விளையாட்டுத் துறையின் இந்த திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.  


    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலன் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் விளையாட்டு அமைச்சகம் பல முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

    விளையாட்டு வீரர்கள் மிகவும் எளிதில் அணுகுவதற்கு உகந்ததாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது, தனிப்பட்ட எந்தவொரு விளையாட்டு வீரரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 17 வகை பயிர்களின் கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

    நெல் உள்ளிட்ட 17 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.

    நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தி ரூ2,040 ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

    எள் குவிண்டாலுக்கு ரூ.523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ.480 உயர்த்தியும், சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ.385 உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    ×