search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashi tamil sangam"

    • தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
    • ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    கன்னியாகுமரியில் இருந்து காசி செல்லும் காசி தமிழ்ச்சங்க விரைவு ரெயில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கட்சியின் துணைத் தலைவர்கள் செந்தில்குமார்,ஜம்போடை சங்கர்,மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம்,தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    அந்த ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும் பூசனிக்காய் சுற்றி உடைத்தும்,பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

    • வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று நிறைவு பெறுகிறது.
    • இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17-ம் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ம் தேதி தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 16) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட 12 விரைவு ரெயில்களில், இதற்காக ஒதுக்கப்பட்ட 36 பெட்டிகளில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆன்மீக தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
    • காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அழைத்து வருவார்கள்.

    வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்க கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், கூறியுள்ளதாவது:

    காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி, பிரதமரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500 பேர் காசிக்கு வருகின்றனர். காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் காசிக்கு அழைத்து வருவார்கள். எனவே இது ஆரம்பத்தான்.

    காசி தமிழ் சங்கமம் பற்றி இதற்கு முன்பு யாரும் யோசிக்கவில்லை. காசியுடன் தொடர்புடைய தென்காசி உள்பட தமிழகத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இந்த தொடர்புகள் பிரதமரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. காசியுடன் தொடர்புடைய தமிழக பகுதிகளுக்கு உத்தரபிரதேச மக்கள் செல்ல வேண்டும். தமிழகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தும்.
    • வாரணாசி ரெயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மறுசீரமைக்கப்படுகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்றும், உலகிலேயே சிறந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் மந்திரி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக குழுவினரின் முயற்சிகளை மந்திரி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல.
    • வர்த்தகத்தால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடு இந்தியா.

    வாரணாசி:

    உத்தர பிரதேசத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தையொட்டி, வாரணாசியில் நடைபெற்ற வர்த்தக இணைப்பு மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    ஆன்மீகமும், வர்த்தகமும், கலாச்சாரமும், பாரம்பரியமும், வாழ்க்கை முறையும், மொழியும் இணைந்த ஒரு சங்கமம்தான் காசி தமிழ் சங்கமம். தமிழகத்தில் காஞ்சிப்பட்டின் வளர்ச்சியை, காசி பனாரஸ் பட்டில் காண முடிகிறது. இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல, வர்த்தகத்தால், பழக்கவழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடாகும்.

    இந்த தன்மையை மனதில் கொண்டு கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று பாரதியார் பாடினார். இந்த நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது கங்கை நதி என்று மகாத்மா காந்தி 1909-ல் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

    மொழிகளும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருப்பினும், தங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என அந்த நூலில் காந்தி கூறியுள்ளார். இதனை தற்போது காசியில் காண முடிகிறது. காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் இருக்கிறது.

    தொன்மையான கலாச்சாரத்துடன் நாட்டை காசி இணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கலாச்சாரத்தை பேணிக்காப்பது நமது கடமை.
    • நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் உறவை பிரதமர் மெருகேற்றி உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமாகா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன் கலந்து கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


    வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை. இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

    ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது.

    மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது. இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
    • கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது

    காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை செல்லும் எல்லோரும் காசி– ராமேஸ்வரம் என்ற சொல்வது மிகவும் பிரபலமானது. ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற கலாச்சார, ஆன்மீக இணைப்பை பிரதமர் மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார்.

    இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

    மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக காசியில் உள்ள பாரதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

    வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது தேசிய கீதம் ஒலித்த பின்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்பு நான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெறாமல் இருப்பதா? என்று எடுத்துக்கூறி மனோன்மணியம் பெ‌.சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாடினேன். இதை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வாரணாசியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற 16 வரை நடைபெற உள்ளது.
    • தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர்.

    கடலூர்:

    காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுரு வாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி, வாரணாசியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற 16 வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, காசி - தமிழகம் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெற உள்ளன. இரு பிராந்திய மக்களிடையே உறவை ஆழப்படுத்துவது இதன் பரந்த நோக்கமாகும்.

    இந்த நிகழ்வில் பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக, தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ெரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர். இந்த ெரயில் நேற்று நள்ளிரவு பண்ருட்டி வழியாக சென்றது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் ெரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்ப ட்டிருந்தனர்.

    • பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய பாஷா சமிதி (பி.பி.எஸ்.) என்கிற அமைப்பு தமிழ் கலாசாரத்துக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழைமையான தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி கொண்டாடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கார்த்திகை மாதம் அனைவரும் சிவனை வழிபட்டு விளக்குகளை ஏற்றுவர்.

    அந்த மாதத்தையொட்டி இது நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் உதவும்.

    ஒரு மாத கால நிகழ்ச்சியாக 'காசி தமிழ்ச் சங்கமம்' வாராணசியில் (காசி) நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள காசி தமிழ்ச் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

    பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் வல்லுநர்கள் அறிஞர்கள் பங்கேற்கும் கல்விப் பரிமாற்றங்கள் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

    இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் மற்றும் நவீன அறிவின் பல்வேறு அம்சங்கள் காசி தமிழ்ச்சங்கமத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 12 குழுக்களில் தலா 210 பேர் பங்கேற்கிறார்கள்.

    கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள் என்றனர்.

    இந்தி திணிப்பு குறித்த தமிழக முதல்வரின் கடிதம் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளையும் தேசிய மொழிகள் என்றும், இந்த மொழிகளில் பொறியியல் உள்ள தொழில் நுட்பப் பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது உள்துறை மந்திரி அமித்ஷா தொழில் நுட்பப் படிப்புகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தாய்மொழி தான்இணைப்பு மொழி (பயிற்று மொழி) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் இந்திதான் பயிற்று மொழி. அதேபோன்று, மற்ற பகுதிகளில் அந்தந்த தாய்மொழிகள் தான் பயிற்று மொழியாக இருக்கும் என்றுதான் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்" என்றார்.

    ×