காஞ்சிபுரத்தில் காசி தமிழ்ச்சங்க ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர். ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் காசி தமிழ்ச்சங்க ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு
Published on

காஞ்சிபுரம்:

கன்னியாகுமரியில் இருந்து காசி செல்லும் காசி தமிழ்ச்சங்க விரைவு ரெயில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கட்சியின் துணைத் தலைவர்கள் செந்தில்குமார்,ஜம்போடை சங்கர்,மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம்,தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

அந்த ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும் பூசனிக்காய் சுற்றி உடைத்தும்,பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com