search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி எந்த காலத்தில் வாழ்கிறார்? - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கேள்வி
    X

    அனுராக் தாக்கூர்

    ராகுல் காந்தி எந்த காலத்தில் வாழ்கிறார்? - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கேள்வி

    • ராகுல் காந்திக்கு இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லையா என மத்திய மந்திரி கேள்வி எழுப்பினார்.
    • டோக்லாமில் ஆக்கிரமிப்புக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். போர் வெடித்தால் அவர்கள் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தக் கூடும் என அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி 1962-ம் ஆண்டிலேயே வாழ்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அனுராக் தாக்கூர் கூறியதாவது:

    காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுக்கு பனி பூட்ஸ் மற்றும் சூட்கள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அல்லது போர் விமானங்கள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

    ராகுல் காந்தி இன்னும் 1962-ம் ஆண்டு சகாப்தத்திலேயே வாழ்கிறார். இந்திய ராணுவத்தை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்துவதில் ஈடுபட வேண்டாம் என அவரிடம் கூறவிரும்புகிறேன். இந்திய ராணுவத்தின் மன உறுதியை வீழ்த்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதா? அல்லது ராகுல் காந்திக்கு இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லையா?

    பயங்கரவாதத்தின் வேரைத் தாக்க இந்திய வீரர்கள் வெற்றிகரமாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினர். டோக்லாமில் ஆக்கிரமிப்புக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம்.

    பாதுகாப்புப் படைகள் வலிமையானதாகவும், எந்தச் சூழ்நிலையிலும் இந்தியாவைக் காக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளன என தெரிவித்தார்.

    Next Story
    ×