search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்றம்"

    • 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன.
    • விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

    இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி நகராட்சி எல்லைப் பகுதியில் விளம்பரப் பலகை, பிளக்ஸ பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்க சட்டம் உள்ளது.

    மேலும் விளம்பர பலகைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் மற்றும் விளம்பர உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே காரமடை நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. அரசு, தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.
    • அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோவி லானூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வியாபாரி மைக்கேல் ராயன் (வயது.60). இவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அவரது வீட்டில் உள்ள வர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, மங்கலம் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், சிவசங்கரன், அன்புமணி, அருள்செல்வன், பார்த்திபன், ராஜதுரை ஆகியோர் அங்கு விரைந்து சென்று, விஷ வண்டு கூட்டினை முற்றிலும் அப்புறப் படுத்தினர்.

    • மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன.
    • விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே விளம்பர பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விளம்பர பலகை சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் 100 வார்டுகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 80 சதவீத விளம்பரப் பலகைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.

    வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில்16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்டலத்தில் 11 என மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாலக்காடு சாலை, ஈச்சனாரி சாலை, பேரூர், ராமநாதபுரம், சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

    • தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
    • உரிமையாளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தஞ்சை பாலாஜி நகர் வாரிப் பகுதியில் 14 கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையடுத்து அந்தக் கடைகளில் உரிமையா ளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இன்று நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன் மற்றும் காவல்துறை, வருவாய் துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    முன்னதாக கடையில் இருந்த பொருட்கள் ஏற்கனவே காலி செய்யப்பட்டது. தொடர்ந்து 14 கடைகளும் இடித்துத் அகற்றப்பட்டன.

    மேலும் அந்த பகுதியில் நீர் நிலைகளில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    • அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர்.
    • ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர். 20 வருடங்களுக்கு மேலாக இருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி துறை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மணலூர்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியதுடன் அகற்றப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

    • பதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது.
    • புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.

      கடலூர்:

    புதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.

    மேலும் அப்பகுதியில் இருந்த புளிய மரங்களும் வெட்டி அகற்றப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடித்து அகற்றப்பட்டதாக அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமலிங்கம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை யில் முடிவு எட்டாத நிலையில் தாசில்தார் பேச்சு வார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கோவிலை அனுமதியின்றி இடித்து அகற்றப்பட்டதாக தெரி வித்து செயல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப் படையில் புதுப்பேட்டை போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, பெரிய கள்ளிப்பட்டு பத்மநாபன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்.
    • மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாமன்னா நீர் ஏற்று நிலையத்தின் அருகே பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    இந்த பணிக்காக தண்ணீரினை அதிகமாக மோட்டார் மூலம் உறுஞ்சி எடுக்க அந்த பகுதியில் பவானி ஆற்றின் நடுவே கற்களை கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டது.

    இந்த தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படுவதாகவும், மேட்டுப்பாளையம் மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    எனவே இதனை அகற்ற வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இருப்பினும் அந்த தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் நேற்று அந்த பகுதியை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களும் சென்றனர்.

    ஆய்வில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் மட்டுமின்றி அதற்கு கீழ் பகுதியில் உள்ள திட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடுப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்புகள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.

    • 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.
    • தொட்டியின் 4 தூண்களும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

    இந்த நிலையில் தொட்டியின் 4 தூண்களும் இடிந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் கவுன்சிலர், ஊராட்சிபஞ்சாயத்து தலைவரிடமும் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பான செய்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நமது மாலைமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இடிந்து விழம் நிலையில் இருந்து நீர் தோக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    மேலும் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி கட்டப்படும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார். குடிநீர் தொட்டியை இடித்து அகற்றப்பட்டதற்காக, இது தொடர்பான செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.
    • மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி 12-வது வார்டு பிள்ளையார் நகர் பகுதியில் அ.தி.மு.க கொடி கம்பம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

    இந்த நிலையில், அந்தப் பகுதியில் சாலை விரி வாக்கம் என்ற பெயரில் தி.மு.க. ஒப்பந்ததாரர் உத்தர சாமி என்பவர் அ.தி.மு.க கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த சுவர்களை ஜெ.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றியதாக தெரி கிறது.இதுகுறித்து அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அங்கு வந்து கேட்டதற்கு, எந்த ஒரு பதிலும் அளிக்கா மல் உத்தரசாமி வாகனத்தை எடுத்து சென்றார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்து அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    தி.மு.க ஒப்பந்ததாரர், அ.தி.மு.க கொடிக்கம்பத்தை இடித்து அகற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது.
    • பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிமாவட் டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த ஏந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பும்போது, உபரி நீர் மரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது  ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது. இ தனால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மோகன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் உயர்நீதி மன்றம் வாய்க்கால் ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை யினருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சங்கராபுரம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் மேற்பார்வையில் பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    இந்த பணியின்போது, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வருவாய் துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • மயான பாதையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுக்கா கம்பைநல்லூர் அடுத்த கோணம்பட்டி கிராமத்தில் சுடுகாடு செல்லும் பாதையில் சிலர் ஆக்கிரப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் மயானத்திற்கு செல்ல இடையூறு ஏற்படுத்துவதாக வந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது.

    இதை அடுத்து காரிமங்கலம் தாசில்தார் சுகுமார் தலைமையில் வருவாய் துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    தொடர்ந்து மயான பாதையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது.
    • 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் சேரக்கூடிய குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் குப்பை களை வாங்கி மக்கும் குப்பையை உரம் தயாரிப்பதற்கும், மக்காத குப்பைகளை பாது காப்பாக அகற்று வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது இந்நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.    இதில் கடந்த 2 நாட்களாக மாசி மக திருவிழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான சாமிகள் கடற்கரைக்கு திரண்டு விமர்சையாக தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.   இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது. கடலூர் மாநகராட்சியின் 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர்.  மேலும் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பெரும்பாலான பகுதிகளில் அன்றைய தினம் குவிந்த குப்பை களையும் துப்புரவு ஊழியர்கள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தனர்.

    இதனை மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துப்புரவு ஊழியர் களிடம் அறிவுறுத்தி னார்கள்.

    ×