search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி புதுப்பேட்டை அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடித்து அகற்றம்: ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்கு
    X

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பண்ருட்டி புதுப்பேட்டை அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடித்து அகற்றம்: ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்கு

    • பதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது.
    • புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.

      கடலூர்:

    புதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.

    மேலும் அப்பகுதியில் இருந்த புளிய மரங்களும் வெட்டி அகற்றப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடித்து அகற்றப்பட்டதாக அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமலிங்கம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை யில் முடிவு எட்டாத நிலையில் தாசில்தார் பேச்சு வார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கோவிலை அனுமதியின்றி இடித்து அகற்றப்பட்டதாக தெரி வித்து செயல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப் படையில் புதுப்பேட்டை போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, பெரிய கள்ளிப்பட்டு பத்மநாபன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×