திருக்கோவிலூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர்.ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
திருக்கோவிலூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Published on

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர். 20 வருடங்களுக்கு மேலாக இருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி துறை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மணலூர்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியதுடன் அகற்றப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com