search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் சில்வர் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி குவிந்த 10 டன் குப்பைகள் அகற்றம்
    X

    கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை குப்பைகளை அகற்றிய போது எடுத்த படம்

    கடலூர் சில்வர் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி குவிந்த 10 டன் குப்பைகள் அகற்றம்

    • கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது.
    • 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் சேரக்கூடிய குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் குப்பை களை வாங்கி மக்கும் குப்பையை உரம் தயாரிப்பதற்கும், மக்காத குப்பைகளை பாது காப்பாக அகற்று வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது இந்நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த 2 நாட்களாக மாசி மக திருவிழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான சாமிகள் கடற்கரைக்கு திரண்டு விமர்சையாக தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது. கடலூர் மாநகராட்சியின் 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பெரும்பாலான பகுதிகளில் அன்றைய தினம் குவிந்த குப்பை களையும் துப்புரவு ஊழியர்கள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தனர்.

    இதனை மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துப்புரவு ஊழியர் களிடம் அறிவுறுத்தி னார்கள்.

    Next Story
    ×