search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth dead"

    • பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கோயம்பேடு, சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜா (வயது24). இவர் நேற்று நள்ளிரவு கொளத்தூர் 200 அடி சாலை செந்தில் நகர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது.
    • விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    மதுரை கடைச்சந்தை பகுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் ஸ்ரீராம் (வயது 32), துரைமுருகன் (31) மற்றும் கார்த்திக்குமார் (28) ஆகிய 3 பேரும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிப்பதற்காக நேற்று காரில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அருவிகளில் குளித்துவிட்டு இன்று அதிகாலையில் ஊருக்கு காரில் மீண்டும் புறப்பட்டனர்.

    அவர்கள் சென்ற கார் தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது. இதில் காரில் பயணம் செய்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆய்க்குடி போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ஸ்ரீராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 40 அடி உயரத்தில் பணியில் இருந்தபோது சக்திவேல் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.
    • சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாதவரம்:

    மாதவரம் தட்டான்குளம் சாலையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு குடோனில் மேற்கூரை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சக்திவேல் (வயது 25) உட்பட 4 பேர் கொண்ட ஒப்பந்த ஊழியர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.

    நேற்று மதியம் 40 அடி உயரத்தில் பணியில் இருந்தபோது சக்திவேல் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார். தலை, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது26). இவர், உறவினர் ஒருவரின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் அய்யப்பன் (30), ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி குமாரி (35) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து விட்டு திருத்தணி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    புச்சிரெட்டிப் பள்ளி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேஷ் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அய்யப்பன், குமாரி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் இருவரும் திருத்தணி அரசு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் திருமகன். டிரைவரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் இன்று வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே அதிகாலை 5.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் திருமகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் வேகமாக மோதியது. இதில் திருமகன் தூக்கி வீசப்பட்டு அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

    இதனால் சம்பவ இடத்திலேயே திருமகன் துடிதுடித்து பலியானார். திருமணமான அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது. இதைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரித்தனர். அப்போது 18 வயது கல்லூரி மாணவரான ஸ்ரீசிஜிவ் விக்ரம் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிய அவரும் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இவர் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பித்திருப்பதும், இன்னும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக வாலிபர் விக்ரம் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • விபத்தில் உயிரிழந்த விஷ்ணுராம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
    • கார் மரத்தில் மோதியபோது முன்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பலூன் விரிந்துள்ளது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இன்று அதிகாலை 3.50 மணி அளவில் மின்னல் வேகத்தில் தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த மரத்தில் மோதி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதில் காரை ஓட்டிச்சென்ற விஷ்ணுராம் என்ற வாலிபர் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணம் செய்த திலீபன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விபத்தில் உயிரிழந்த விஷ்ணுராம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். திலீபன் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இருவரும் தொழில் விஷயமாக சென்னை வந்து உள்ளனர்.

    இந்த நிலையில்தான் இன்று அதிகாலையில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கார் மரத்தில் மோதியபோது முன்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பலூன் விரிந்துள்ளது. இருப்பினும் காரை ஓட்டிச் சென்ற விஷ்ணுராம் உயிரிழந்திருக்கிறார்.

    விஷ்ணுராம் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு விஷ்ணுராம் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார்.
    • மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது.

    கோவிலம்பாக்கம்:

    பள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஷேக் சம்சுதீன்(வயது28). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.

    இவர் குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
    • விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, புளியம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை, ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் அருண்குமார் (வயது 22) என்பதும், நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பூலாம்பட்டி போலீசார், தொடர்ந்து அவர் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வடமாநில வாலிபர் மீது மோதியது.
    • வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வடமாநில வாலிபர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார்.
    • ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார்.

    மாமல்லபுரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் இளஞ்சூரியன் (வயது27). அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சிமெண்ட் தொட்டிகள், சிலாப்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார். கல்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய லாரியின் மேல்பகுதியில் படுத்து இருந்த இளஞ்சூரியன் தவறி நடுரோட்டில் கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தினார்.

    பின்னர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய இளஞ்சூரியனை அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே இளஞ்சூரியன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார்.
    • சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    பழனி மருத்துவ நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா (வயது38). திருமணமாகாதவர். இவரது நண்பர் அழகேசன் (30). பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அழகேசன் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.

    குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார். இதையடுத்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது இந்த விபரீத சம்பவம் நடந்தது.
    • ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    கோவை,

    ஒடிசாவை சேர்ந்தவர் கார்த்திக் போய் (வயது 31). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் விடுமுறை நாளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இதேபோன்று, ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது பந்தை அடித்த போது கம்பெனியில் மேற்கூரையில் விழுந்தது. இதனை எடுக்க கார்த்திக் போய் மேலே ஏறினார். அப்போது பந்தை எடுக்க முயன்ற போது மேற்கூரை பெயர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×