தென்காசி அருகே விபத்து- லாரி மீது கார் மோதி வாலிபர் பலி

தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது.விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அருகே விபத்து- லாரி மீது கார் மோதி வாலிபர் பலி
Published on

தென்காசி:

மதுரை கடைச்சந்தை பகுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் ஸ்ரீராம் (வயது 32), துரைமுருகன் (31) மற்றும் கார்த்திக்குமார் (28) ஆகிய 3 பேரும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிப்பதற்காக நேற்று காரில் வந்தனர்.

பின்னர் அவர்கள் அருவிகளில் குளித்துவிட்டு இன்று அதிகாலையில் ஊருக்கு காரில் மீண்டும் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற கார் தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது. இதில் காரில் பயணம் செய்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆய்க்குடி போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ஸ்ரீராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com