search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruttani Accident"

    • கசவராஜப்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் பின்னால் வேகமாக மோதியது.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா தூக்கி எறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே பலியானார்.

    திருத்தணி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நீலகண்டாபுரம் இருளர் காலனியில் வசிப்பவர் சிவா(34). இவரது மனைவி மகேஸ்வரி. (25) இருவரும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் நெசவு தொழிலான தறி ஓட்டும் பணி செய்து வருகின்றனர்.

    இருவரும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் இருந்து வேலை முடிந்து நேற்று இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கசவராஜப்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் பின்னால் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா தூக்கி எறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே பலியானார்.

    அவரது மனைவி மகேஸ்வரி பலத்த காயமடைந்த நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு சிவாவின் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது26). இவர், உறவினர் ஒருவரின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் அய்யப்பன் (30), ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி குமாரி (35) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து விட்டு திருத்தணி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    புச்சிரெட்டிப் பள்ளி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேஷ் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அய்யப்பன், குமாரி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் இருவரும் திருத்தணி அரசு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் அருகே வரும்போது திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சரக்கு லாரி கார் மீது மோதியது.
    • கார் நொறுங்கியதில் காரை ஓட்டி வந்த குபேரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வி.எஸ். குபேரன்(வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் திருவள்ளூரில் சினிமா தியேட்டர் விடுதி செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமான நிலம் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ளது.‌ அங்கு இவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது.

    ஆந்திர மாநிலம் புத்தூரில் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டு மீண்டும் தனக்கு சொந்தமான காரை அவரே ஓட்டிக்கொண்டு திருத்தணி வழியாக தன்னுடைய கிராமத்திற்கு வந்துள்ளார். திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் அருகே வரும்போது திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சரக்கு லாரி கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியதில் காரை ஓட்டி வந்த குபேரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று குபேரன் பிணத்தை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் மற்றும் லாரியை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×