திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
Published on

திருத்தணி:

திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது26). இவர், உறவினர் ஒருவரின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் அய்யப்பன் (30), ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி குமாரி (35) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து விட்டு திருத்தணி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

புச்சிரெட்டிப் பள்ளி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேஷ் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அய்யப்பன், குமாரி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் இருவரும் திருத்தணி அரசு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com