திருத்தணி அருகே கார் மீது லாரி மோதி தி.மு.க. பிரமுகர் பலி

திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் அருகே வரும்போது திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சரக்கு லாரி கார் மீது மோதியது. கார் நொறுங்கியதில் காரை ஓட்டி வந்த குபேரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
திருத்தணி அருகே கார் மீது லாரி மோதி தி.மு.க. பிரமுகர் பலி
Published on

திருத்தணி:

திருத்தணி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வி.எஸ். குபேரன்(வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் திருவள்ளூரில் சினிமா தியேட்டர் விடுதி செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.

இவருக்கு சொந்தமான நிலம் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ளது.‌ அங்கு இவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது.

ஆந்திர மாநிலம் புத்தூரில் செங்கல் சூளை மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டு மீண்டும் தனக்கு சொந்தமான காரை அவரே ஓட்டிக்கொண்டு திருத்தணி வழியாக தன்னுடைய கிராமத்திற்கு வந்துள்ளார். திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் அருகே வரும்போது திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சரக்கு லாரி கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியதில் காரை ஓட்டி வந்த குபேரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று குபேரன் பிணத்தை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் மற்றும் லாரியை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com