என் மலர்
உள்ளூர் செய்திகள்

எடப்பாடி அருகே விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்பு
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
- விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, புளியம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை, ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பிணமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் அருண்குமார் (வயது 22) என்பதும், நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பூலாம்பட்டி போலீசார், தொடர்ந்து அவர் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






