பழனியில் சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார். சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழனியில் சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
Published on

பழனி:

பழனி மருத்துவ நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா (வயது38). திருமணமாகாதவர். இவரது நண்பர் அழகேசன் (30). பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அழகேசன் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.

குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார். இதையடுத்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com