search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man arrested"

    • உளுந்தூர்பேட்டை வாலிபர் நூதனமோசடி வழக்கில் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார்
    • திண்டுக்கல்லில் மோசடி வழக்கில் வாலிபர் கைது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராமம் நேருஜி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி விஜயலட்சுமி. சீனிவாசனிடம் மர்ம நபர் வங்கி அலுவலர் போல் பேசி அவரது வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம். அட்டையின் ரகசிய எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளார்.

    அதைப்பய ன்படுத்தி சீனிவாசன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 76,821 ஐ அந்த நபர் எடுத்து விட்டார்.


    இதனை அறிந்த சீனிவாசன் திண்டுக்கல் சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரின் கைப்பேசி எண் மற்றும் பணப்பரிவர்த்தனை நடைபெற்ற வங்கி கணக்கு எண் மூலம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் மோசடி செய்து பணம் பறித்த நபர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதி யைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்டாலின் (வயது 28) என்பது தெரிய வந்தது. உளுந்தூர்பேட்டைக்கு சென்ற திண்டுக்கல் சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஸ்டாலினை கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • சரக்கு வாகனத்தில் பேட்டரியை வாலிபர் ஒருவர் திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • வாலிபரை போலீசார் கைது செய்து 3 பேட்டரிகள் பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27).இவர் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை மாசிலாமணிபுரம் ரயில்வே கேட் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் அவரது சரக்கு வாகனத்தில் பேட்டரியை வாலிபர் ஒருவர் திருட முயற்சி செய்தார். இதனை கண்ட கார்த்திக் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் குள்ளனம்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதம் (19) என்பதும், அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களில் பேட்டரியை திருடியதும் தெரிய வந்தது.

    போலீசார் கவுதமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து 3 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார்.
    • போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து வாலிபரை சிறையில் அடைத்தனர்.

    வடமதுரை :

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள பல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த காளிமுத்தன் மகன் அய்யனார்(21). இவர் நொச்சிபட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியான 10-ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றார்.

    மகளை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த அவரது பெற்றோர் இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் அய்யனார் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து விசாரித்ததில் அவர்கள் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அங்கு சென்றபார்த்தபோது அவர் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை அழைத்து வந்த போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அய்யனார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பு விளாகம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது23). இவர் கருப்பந்துறை பகுதியில் அடிக்கடி கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீசார் கருப்பந்துறை பகுதியில் சோதனை செய்தனர். 

    அப்போது மாரிமுத்து ஆற்றுப்பகுதியில் மறைந்திருந்து கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவும், ரொக்க பணம் ரூ.7 ஆயிரத்து 50-ஐயும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், குமார், உதவி-சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் குற்றபிரிவு போலீசார் பராளுமன்ற தேர்தலையொட்டி நேற்று இரவு வில்லியனூர் பகுதியில் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் 2 சாக்கு பைகளுடன் நின்று கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர். இதையடுத்து அந்த வாலிபர் வைத்திருந்த பைகளில் சோதனை நடத்தியபோது அதில் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் ரெயில்வே காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது30) என்பதும் இவர் புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    பாலக்காடு அருகே யானைகளை சுட்டு கொன்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அமைதி பூங்கா அருகே உள்ள மணலியம்பாடம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் யானை இறந்து கிடந்தது.இதனை ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த இரு யானைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணலியம்பாடம் ஜபீர் (35), மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பிஜூ (26) ஆகியோர் இரு யானைகளையும் சுட்டு கொன்றது தெரிய வந்தது.

    அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தந்தங்களை அறுப்பதற்காக பயன்படுத்திய கட்டிங் எந்திரம், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.யானைகளை கொன்று அதன் தந்தங்களை திருட முயன்றது தெரிய வந்தது. கொல்லப்பட்ட இரு யானைகளையும் மன்னார்காடு கால்நடை டாக்டர் ஷாஜி பிரேத பரிசோதனை நடத்தினார். யானைகளை சுட்டு கொன்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    ஜோலார்பேட்டை ரெயிலில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 25). வடமாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவிஹோரா இவர்கள் இருவரும் சம்பவத்தன்று சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    காட்பாடி ஜோலார்பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது இருவரது செல்போன்களும் காணாமல் போயிருந்தது இது குறித்து இருவரும் ஜோலார்பேட்டை ரெயில் வே போலீசில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் ரெயிவே போலீசார் நேற்று மாலை 3 பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாணியம்பாடியை சேர்ந்த ஹர்‌ஷன் அஹமது என்பது தெரியவந்தது. மேலும் ரெயிலில் ராஜேஷ்கண்ணா, ஸ்ரீவிஹோரா ஆகியோரது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி மானபங்கப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்தவர்  40 வயது இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். 
    இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (19).மற்றும் தேனிமலை பகுதியை சேர்ந்த சேகர் (35). இருவரும் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர்.

    தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை நிர்வாணபடுத்தி பாலியல் தொல்லை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

    இது குறித்து இந்த இளம்பெண் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அஜித்தை கைது செய்து தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவிலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வல்லன் குமாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி பார்வதி(வயது72).

    நேற்று பார்வதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றிருந்தார். அப்போது அவரது இளைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பார்வதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று அவரது மகளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அப்போது பார்வதியும் வீட்டிற்கு வந்தார்.

    அவர் வீட்டின் உள்ளே சென்று அவர்களுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றார். இந்த நிலையில் அவரது இளைய மகள் கையில் கிடந்த 2 கிராம் தங்க மோதிரத்தை அவர்கள் பறித்தனர். இதனை பார்த்த பார்வதி கூச்சலிட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதனை பார்த்த அந்த 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்தது, தூத்துக்குடியைச் சேர்ந்த நெல்லையப்பன் மற்றும் வட்டக்கோட்டைச் சேர்ந்த ஆறுமுகம், அய்யப்பன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதில் நெல்லையப்பன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அய்யப்பனை தேடி வருகிறார்கள். #tamilnews
    திருமங்கலத்தில் காதலித்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் பயோனியர் காலனியைச் சேர்ந்த வாவாபக்ருதீன் மகள் அஷீமா பானு (வயது 22). இவர் திருமங்கலம் நகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தை சேர்ந்த பிரேம்குமார் (22) என்பவருடன் பள்ளி படிப்பு காலம் முதல் பழக்கம் இருந்தது. இது காதலாக மாறியது.

    கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் எனக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த பிரேம்குமார் எனது வீட்டுக்கு வந்து நட்பு ரீதியாக எடுத்த போட்டோவை காண்பித்து மிரட்டல் விடுத்தார்.

    என் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்றும் எச்சரித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேம்குமார் கைது செய்யப்பட்டார்.

    திண்டிவனம் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள மேல்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி மீனாட்சியம்மாள்(வயது 75). இவர் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மூதாட்டி அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றார்.

    பின்னர் அவரை பாலியல் பலாத்காரமும் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திண்டிவனம் அடுத்த விழுக்கம் காலனியை சேர்ந்த முருகன்(35) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். 

    திருவொற்றியூர் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    ராயபுரம்:

    திருவொற்றியூர் கிராமத் தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அதே பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சித்ராவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி செல்ல முயன்றான்.

    அவனை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ் என்பதும், ஓட்டி வந்து புதுவண்ணாரப்பேட்டையில் பருப்பு வியாபாரி ஒருவரிடம் திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிந்தது. #tamilnews
    ×