என் மலர்
நீங்கள் தேடியது "cellphone theft"
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
- மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் இன்று வீட்டின் அருகே பல்லவன் நகர் பகுதியில் செல்போனில் பேசியபடியே நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
போரூர்:
செங்குன்றம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மாலை மனைவி, மகளுடன் மருத்துவ சிகிச்சைக்காக கே.கே.நகர் வந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அசோக் நகர் உதயம் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாநகர பஸ்சில் (எண்113) ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே நகர் போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- விகர்வூ நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
போரூர்:
வளசரவாக்கம் பாலாஜி அவின்யூ பகுதியை சேர்ந்தவர் சாந்தி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சாந்தியின் செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ (வயது 21) வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென விகர்வூவின் கைப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். அதில் ரூ.500 ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.
கோவை:
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி மேலாளராக வேலை செய்து வருபவர் லட்சுமணராஜ் (வயது 56).
இவர் வேலை செய்யும் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் யாரோ அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிக்க முடிவு செய்தனர். அதன்படி சுப்பிரமணி மற்றும் யுவராஜ் என்பவர்களை காவல் பணியில் ஈடுபடுத்தினர்.
அவர்கள் இரவு ரோந்து சென்றபோது வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஒருவர் செல்வதை பார்த்தனர். உடனே காவலர்கள் 2 பேரும் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த மர்ம நபர் அறையில் இருந்த 3 செல்போன்களை எடுத்து அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் அவர்கள் அந்த மர்ம நபரை தேடி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் அதே பகுதியை சேர்ந்த அபூகுரைரா (21) என்பது தெரியவந்தது. காவல் பணியில் ஈடுபட்டவர்கள் மர்ம நபர் குறித்து மேலாளர் லட்சுமணராஜிடம் கூறினர். இவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பதுங்கி இருந்த அபூகுரைராவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஊழியர் கைது
- நிறுவனத்தின் காவலாளி, ஊழியரை பரிசோதனை செய்தார்.
கோவை
கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பெர்னாண்டஸ் (வயது 32). இவர் ஒரட்டுகுப்பை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இங்கு சேலத்தை சேர்ந்த சங்கர் பரத் (20) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கர் பரத் வழக்கம் போல வேலைக்கு வந்தார். அங்கு வினியோகம் செய்ய இருந்த பொருட்களை பார்சல் செய்து கொண்டு இருந்தார்.
பின்னர் அவர் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். நிறுவனத்தின் காவலாளி சங்கர் பரத்தை பரிசோதனை செய்தார். அப்போது அவர் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மறைத்து திருடி செல்வது தெரியவந்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி உடனே மேலாளர் கிறிஸ்டோபர் பெர்னாண்டசிடம் தெரிவித்தார். அவர் அங்கு வந்து சங்கர் பரத்தை கண்டித்து விசாரித்தார். அதில் அவர் ஏற்கனவே ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மேலாளர், ஊழியர் சங்கர் பரத்தை பிடித்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் பரத் கைது செய்தனர். பின்னர் அவர் திருடிய செல்போனை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பஞ்சயம் கோட்டை பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு நெல்லை மாவட்டம் சுந்தரேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிபாண்டியன் (வயது 65) என்பவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே குவாரியில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடி வாரத்தை சேர்ந்த செல்வராஜ் (32) என்பவரும் கல் உடைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இசக்கிபாண்டியனின் செல்போனை செல்வராஜ் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
தற்போது கரூர் மாவட்டம் பஞ்சயம் கோட்டை கல்குவாரியில் பணியாற்றி வந்த போது, செல்வராஜ் தனது செல்போனை திருடியது தொடர்பாக இசக்கிப்பாண்டியன் சக தொழிலாளர்களிடம் கூறி வந்துள்ளார். இதனால் அவமானமடைந்த செல்வராஜ், இசக்கி பாண்டியனிடம் என்னை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவு மது அருந்தி விட்டு வந்த செல்வராஜ், இசக்கிபாண்டியன் தங்கியிருந்த குடிசைக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து இசக்கிபாண்டியனின் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி இசக்கிப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பா ளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இசக்கிப்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளி செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு- உள்நாட்டு முனையங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றி, இறக்கும் போது அவர்களது செல்போன்கள் அடிக்கடி திருட்டு போய் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் தற்காலிக ஊழியரான மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் செல்போன் திருடி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும் 20 செல்போன்களை வெளியில் விற்றுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான பயணிகளிடம் செல்போன்களை திருடியதாக 3 தற்காலிக ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோலார்பேட்டை:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 25). வடமாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவிஹோரா இவர்கள் இருவரும் சம்பவத்தன்று சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
காட்பாடி ஜோலார்பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது இருவரது செல்போன்களும் காணாமல் போயிருந்தது இது குறித்து இருவரும் ஜோலார்பேட்டை ரெயில் வே போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ரெயிவே போலீசார் நேற்று மாலை 3 பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாணியம்பாடியை சேர்ந்த ஹர்ஷன் அஹமது என்பது தெரியவந்தது. மேலும் ரெயிலில் ராஜேஷ்கண்ணா, ஸ்ரீவிஹோரா ஆகியோரது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் போலீசாரை கண்டதும் ஓடினார்.
போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சித்தூர் ஆட்டோ நகரை சேர்ந்த ராஜசேகரன் (வயது 35), என்பது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறிய பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது.
மேலும் சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ராஜசேகரனை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
விருகம்பாக்கம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் பழனி (18). என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்.
நேற்று முன்தினம் மாலை மாணவர் பழனி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு செல்போனில் பேசியபடியே நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பழனி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
செல்போன் பறித்து தப்பி சென்ற பைக்கின் எண்ணையும் போலீசாரிடம் பழனி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அதே எண் கொண்ட மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.
அதில் இருந்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு, சைதாப்பேட்டையைச் சேர்ந்த அசாருதீன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது கிண்டி, சைதாப்பேட்டை மவுண்ட் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளது. போலீசார் விசாரணையில் தெரியவந்தது.