பெண்ணிடம் செல்போன் பறிப்பு

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விகர்வூ நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
பெண்ணிடம் செல்போன் பறிப்பு
Published on

போரூர்:

வளசரவாக்கம் பாலாஜி அவின்யூ பகுதியை சேர்ந்தவர் சாந்தி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சாந்தியின் செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ (வயது 21) வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென விகர்வூவின் கைப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். அதில் ரூ.500 ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது.

கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com