கே.கே.நகரில் மாநகர பஸ்சில் சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போன் திருட்டு

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
கே.கே.நகரில் மாநகர பஸ்சில் சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போன் திருட்டு
Published on

போரூர்:

செங்குன்றம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று மாலை மனைவி, மகளுடன் மருத்துவ சிகிச்சைக்காக கே.கே.நகர் வந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அசோக் நகர் உதயம் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாநகர பஸ்சில் (எண்113) ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே நகர் போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com