என் மலர்
நீங்கள் தேடியது "employee arrest"
- திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது அங்கு இருந்த பதிவறை எழுத்தர் சிவஞான வேலு என்பவரிடம் தனது தாயார் கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாவில் தன் தாயின் பெயர் கிராம, வட்ட கணக்கில் திருத்தம் செய்வதற்காக 2007 பதிவேடுகளை எடுத்து தர கூறினார்.இதற்கு பதிவறை எழுத்தர் சிவஞானவேலு ரூ. 5 ஆயிரம் யுவராஜிடம் கேட்டார்.
அதிர்ச்சி அடைந்த யுவராஜ்இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து இன்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை யுவராஜிடம் கொடுத்தனர்.இந்த ரூபாய் நோட்டுகளை அவர் பதிவறை எழுத்தர் ஞானவேலுவிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவஞான வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர் லஞ்சமாக கேட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து அவர் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு- உள்நாட்டு முனையங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றி, இறக்கும் போது அவர்களது செல்போன்கள் அடிக்கடி திருட்டு போய் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் தற்காலிக ஊழியரான மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் செல்போன் திருடி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும் 20 செல்போன்களை வெளியில் விற்றுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான பயணிகளிடம் செல்போன்களை திருடியதாக 3 தற்காலிக ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் காங்கயம் ரோடு ஆர்.வி.இ. நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர் வீரபாண்டியில் பிளாஸ்டிக் கேரி பேக் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனியில் கேரி பேக் விற்பனை கணக்கில் மோகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பை சோதனை செய்தார். அப்போது 3 டன் கேரி பேக்குகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அதே கம்பெனியில் வேலை செய்யும் திருப்பூர் நொச்சி பாளையத்தை சேர்ந்த ஊழியர் பரத் (30) என்பவர் திருடியது பதிவாகி உள்ளது. இதனையடுத்து மோகன் வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்தை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிப்ரவரி மாதம் முதல் சிறிது சிறிதாக 3 டன் கேரி பேக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பரத்தை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் காட்டன் மில் ரோட்டில் உள்ள செல்வவிநாயகர் கோவில் உண்டியல் திருடப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த சந்தானக்குமார் (17), பவுன்ராஜ் (14) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் கோவில் உண்டியலை திருடியதும், அதில் ரூ.6 ஆயிரம் இருந்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.