என் மலர்

  நீங்கள் தேடியது "Tiruppur plastic company"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் பிளாஸ்டிக் கம்பெனியில் 3 டன் கேரி பேக்குகளை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் காங்கயம் ரோடு ஆர்.வி.இ. நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர் வீரபாண்டியில் பிளாஸ்டிக் கேரி பேக் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனியில் கேரி பேக் விற்பனை கணக்கில் மோகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பை சோதனை செய்தார். அப்போது 3 டன் கேரி பேக்குகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

  அப்போது அதே கம்பெனியில் வேலை செய்யும் திருப்பூர் நொச்சி பாளையத்தை சேர்ந்த ஊழியர் பரத் (30) என்பவர் திருடியது பதிவாகி உள்ளது. இதனையடுத்து மோகன் வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்தை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிப்ரவரி மாதம் முதல் சிறிது சிறிதாக 3 டன் கேரி பேக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.  இதனையடுத்து பரத்தை போலீசார் கைது செய்தனர்.

  இதேபோன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் காட்டன் மில் ரோட்டில் உள்ள செல்வவிநாயகர் கோவில் உண்டியல் திருடப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த சந்தானக்குமார் (17), பவுன்ராஜ் (14) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் கோவில் உண்டியலை திருடியதும், அதில் ரூ.6 ஆயிரம் இருந்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
  ×