என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல்  உரிமையாளரிடம் மொபட்- செல்போன் பறிப்பு
    X

    ஓட்டல் உரிமையாளரிடம் மொபட்- செல்போன் பறிப்பு

    • முகவரி கேட்பது போல் நடித்து திருடர்கள் கைவரிசை
    • மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சதீஸ் (வயது 48). இவர் எல்.அண்டு.டி பைபாஸ் ரோட்டில் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் சதீஸ் கடையை மூடி விட்டு அவரது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மொபட் போடிபாளையம் பிரிவை தாண்டி சென்று கொண்டு இருந்த போது அவைர பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது பின்னால் இருந்தவர் சதீசிடம் முகவரி கேட்டார். இதனையடுத்து மொபட்டின் வேகத்தை குறைத்த அவர் முகவரி கூறிக்கொண்டு இருந்தார்.

    கண்இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள் மொபட்டின் மீது மோட்டார் சைக்கிளை மோதினர். இதில் நிலைதடுமாறிய சதீஸ் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சதீசின் மொபட் மற்றும் செல்போனை பறித்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து சதீஸ் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி கேட்பது போல நடித்து மொபட் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×