என் மலர்

  நீங்கள் தேடியது "gun seized"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலக்காடு அருகே யானைகளை சுட்டு கொன்ற 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அமைதி பூங்கா அருகே உள்ள மணலியம்பாடம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் யானை இறந்து கிடந்தது.இதனை ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  இந்த இரு யானைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

  இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணலியம்பாடம் ஜபீர் (35), மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பிஜூ (26) ஆகியோர் இரு யானைகளையும் சுட்டு கொன்றது தெரிய வந்தது.

  அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தந்தங்களை அறுப்பதற்காக பயன்படுத்திய கட்டிங் எந்திரம், அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.யானைகளை கொன்று அதன் தந்தங்களை திருட முயன்றது தெரிய வந்தது. கொல்லப்பட்ட இரு யானைகளையும் மன்னார்காடு கால்நடை டாக்டர் ஷாஜி பிரேத பரிசோதனை நடத்தினார். யானைகளை சுட்டு கொன்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கம் அருகே புள்ளிமானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
  திருவண்ணாமலை:

  செங்கம் அருகே பிஞ்சூர் வனப்பகுதியில் புள்ளிமான்கள் உள்ளன. இந்த மான்களை சமூக விரோதிகள் வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கம் வனத்துறை அதிகாரி ராமநாதன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் பிஞ்சூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

  அப்போது தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

  அவர்களிடம் இருந்த ஒரு சாக்குபையை வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதில் சுமார் 25 கிலோ புள்ளிமான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

  மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுப்பாளையம் அடிவாரம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 28), வீரானந்தல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (38) ஆகியோர் என்பதும், அவர்கள் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியை கொண்டு மான்களை வேட்டையாடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கோட்டை அருகே துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் நுழைந்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செங்கோட்டை:

  நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை செல்லும் வழியில் வனப்பகுதியில் குரங்குநாட்டு ஓடை உள்ளது. இங்கு உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகில் தனியார் நிலத்தில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதுகுறித்து புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்மகும்பல் பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கி என்று தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, ஒரு கும்பல் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியது. அந்த கும்பல் நாட்டு துப்பாக்கியை காட்டி வனத்துறையினரை மிரட்டி, சந்தன மரங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டது. அவ்வாறு மர்ம கும்பல் தப்பிச் செல்லும் போதும் நாட்டு துப்பாக்கியை போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 5 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் செங்கோட்டை முத்தழகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முஸ்தபா(வயது 47), புளியரை புதுகாலனி தெருவை சேர்ந்த கருப்பசாமி(30), புளியரை வாட்டர்டேங் தெருவை சேர்ந்த சுரேஷ், புளியரை வடக்கு தெருவை சேர்ந்த மற்றொரு கருப்பசாமி, கற்குடியை சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது.

  மேலும் இவர்கள் 5 பேரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது. காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக பயன்படுத்த வைத்து இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  இதையடுத்து 5 பேரையும் போலீசார் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் நாட்டு துப்பாக்கி தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ×