என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
    X

    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், குமார், உதவி-சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் குற்றபிரிவு போலீசார் பராளுமன்ற தேர்தலையொட்டி நேற்று இரவு வில்லியனூர் பகுதியில் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் 2 சாக்கு பைகளுடன் நின்று கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர். இதையடுத்து அந்த வாலிபர் வைத்திருந்த பைகளில் சோதனை நடத்தியபோது அதில் 83 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் ரெயில்வே காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது30) என்பதும் இவர் புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    Next Story
    ×