search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker murder"

    • கொலை செய்யப்பட்டு கிடந்தவர் எஸ்.எஸ்.காலனி மாப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் என்பது கண்டறியப்பட்டது.
    • பொன்மேனி சுடுகாட்டில் மயானத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை.

    மதுரை:

    மதுரை ஜெய்நகரில் தனியார் பள்ளி அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ இரும்பு ஆயுதத்தால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் எஸ்.எஸ்.காலனி மாப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் (வயது 60) என்பது கண்டறியப்பட்டது. பொன்மேனி சுடுகாட்டில் மயானத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை.

    அவரை கொலை செய்தது யார்? என்பது கண்டுபிடிக்க சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று நள்ளிரவு அய்யனார் சம்பவ இடத்தில் நடந்து வருவது, அவரிடம் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் பீடி கேட்டு தகராறு செய்வது, அப்போது அந்த வாலிபர் அய்யனாரை தலையில் சுத்தியலால் சரமாரி தாக்குவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

    ஆனால் அய்யனாரை அடித்து கொன்ற வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யனாரை கொன்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பாலமுருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
    • பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். ஒரு குழந்தை மட்டும் உள்ளது. குழந்தை, பாலமுருகனின் சித்தி வீட்டில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    பாலமுருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

    பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (39) என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை முத்துராஜிடம், பாலமுருகன் தான் கடனாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தற்பொழுது தன்னிடம் பணம் இல்லை, சில தினங்களில் கொடுத்து விடுவதாக முத்துராஜ் கூறியுள்ளார்.

    இருப்பினும் பாலமுருகன், பணத்தினை உடனே தர வேண்டும் என்று கூறி அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து முத்துராஜ், பாலமுருகனின் சித்தி ரேவதியிடம் சென்று பணத்தினை விரைவில் தருவதாகவும், பாலமுருகன் அவதூறாக பேசுவதாகவும் கூறியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து ரேவதி, பாலமுருகனை சத்தம் போட்டுள்ளார். மது போதையில் இருந்த பாலமுருகன் ரேவதிவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ரேவதி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்றிரவு அதிக மது போதையில் இருந்த பாலமுருகன், எப்படி நீ பணம் கேட்டதை சித்தியிடம் கூறினாய் என்று கூறி முத்துராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், தான் வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தி விட்டு ஓடிவிட்டார்.

    இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கார்த்திக்குக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார்.
    • நேற்று மாலையில் குடிபோதையில் தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (வயது70). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி. இவர்களது மகன் கார்த்திக் (38). இவர் கோழி வண்டி லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார்.

    கார்த்திக்குக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். நேற்று மாலையில் குடிபோதையில் தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது வீட்டுக்கு வரும் மின் ஒயரை ராஜி அறுத்து விட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மீண்டும் இரவு 11 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் ரிப்பர் கட்டையால் ராஜிவை தாக்கியுள்ளார்.

    இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ராஜிவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த கார்த்திக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொழிலாளியை விரட்டிச் சென்று படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகநாதன் (வயது 32). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையப்பகுதியில் இன்று பிற்பகல் 11 மணியளவில் நாகநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 மர்ம நபர்கள் நாகநாதனை கொலை செய்ய முற்பட்டனர். இதைப்பார்த்த நாகநாதன் அவர்களிடம் தப்பிப்பதற்காக ஓடினார்.

    ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவர் இறந்ததை உறுதி செய்தபின் அந்த கும்பல் சர்வ சாதாரணமாக அங்கிருந்து சென்றது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலையால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகநாதன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தோட்ட தொழிலாளியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த வரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வெள்ளிராஜன் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்த குண்டாறு சக்திவேல் (35) என்பவர் தோட்டத்துக்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த ஆடுகளை திருட முயன்றார். இதை பார்த்த வெள்ளிராஜன் அவரை தடுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குண்டாறு சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளிராஜனை சரமாரியாக குத்தியும், தாக்கியும் அங்கிருந்து தப்பினார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெள்ளிராஜனை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் பதுங்கி இருந்த கொலையாளி குண்டாறு சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை எட்டிமடை அருகே வடமாநில தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    மேற்கு வங்க மாநிலம் பீர் பாரா பகுதியை சேர்ந்தவர் சோரன் மார்க்கஸ் (வயது 24).

    எர்ணாகுளத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று கோவை எட்டிமடை பகுதியில் மரத்தில் பெல்ட்டால் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    கே.ஜி. சாவடி போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அவரை அடித்துக் கொலை செய்து பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்க விட்டது தெரிய வந்தது.

    அவரது சட்டைப்பையில் இருந்த வாக்காளர் அடையாள அட்டை மூலம் இறந்தது சோரன் மார்க்கஸ் என்பதை உறுதி செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதில் சோரன் மார்க்கஸ் விடுமுறையில் சொந்த ஊர் சென்று விட்டு கடந்த 19-ந் தேதி ரெயிலில் கேரளாவுக்கு திரும்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் எட்டிமடை வரக்காரணம் என்ன? அவரை கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரித்த போது நேற்று முன்தினம் இரவு சோரன் மார்க்கசுடன் கே.ஜி.சாவடி அருகே உள்ள சாவடிபுதூரை சேர்ந்த பிரபாகரன்(24) என்பவர் சாவடி சந்திப்பு பகுதியில் தகராறு செய்தது தெரிய வந்தது.

    கூலி வேலை பார்த்து வரும் பிரபாகரன் மீது கே.ஜி. சாவடி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர், நான் சாவடி சந்திப்பில் நின்ற போது சோரன் மார்க்கஸ் அங்கு வந்ததாகவும், அவரிடம் குடிக்க பணம் கேட்ட போது தர மறுத்ததால் கல்லால் அவரது தலையில் தாக்கியதாகவும், இதில் சோரக் மார்க்கஸ் இறந்து விட்டதால் பெல்ட்டில் கட்டி மரத்தில் தொங்க விட்டதாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட சோரன் மார்க்கஸ் எர்ணாகுளத்துக்கு செல்லும் வழியில் எட்டிமடையில் இறங்கியது ஏன்? என தெரியவில்லை. சோரன் மார்க்கசின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்ததும் உடல் பிரேதபரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை, ஆண்டார் குப்பம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 49). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் இரவு பணிக்கு செல்லும் போது கம்பெனியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம்.

    நேற்று இரவு விஜய் வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்களுடன் அங்குள்ள அறையில் தூங்கினார்.

    அதிகாலையில் தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது விஜய் மாயமாகி இருந்தார். அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கம்பெனி அருகில் உள்ள குப்பை மேட்டில் விஜய் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விஜய் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து உடலை எரித்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் விஜய்யுடன் கடைசியாக இருந்தவர்கள் யார்-யார்? யாருடனும் மோதல் உள்ளதா? என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

    சென்னை தொழிலாளி குப்பைமேட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சுடுகாடு முன்பு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழை நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என இரண்டு மகன்களும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள், மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவகுமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்துள்ளார். பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த சிவகுமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகுமார் எதற்காக சுடுகாடு அருகே உள்ள பகுதிக்கு வந்தார் என்று மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பெருந்துறை டி.எஸ்.பி நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    கோவை செல்வபுரத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளியை உறவினர் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை உக்கடம் லாரி பேட்டையை சேர்ந்தவர் மைதீன் பாதுசா (வயது 33). கூலித் தொழிலாளி.

    நேற்று இரவு இவர் குடிபோதையில் செல்வபுரம் தில்லை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த உறவினரான சுல்தான் பாதுசா என்பவர், மைதீன் பாதுசாவிடம் மது குடித்து விட்டு இங்கு வரக்கூடாது என கூறினார்.இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த சுல்தான் பாதுசா அங்கு இருந்த பிளாஸ்டிக் நாற்காலியால் மைதீன் பாதுசாவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் மயங்கிய மைதீன் பாதுசா சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுல்தான் பாதுசா அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மைதீன் பாதுசாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான சுல்தான் பாதுசாவை தேடி வருகிறார்கள். #tamilnews

    கோவையில் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 37). தச்சுதொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் பாபுராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.கே. புதூரை சேர்ந்த ஒருபெண்ணும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் பாபுராஜ் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக்காதலியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு பாக்கியம் குழந்தைகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பாபுராஜ் குடிபோதையில் பாக்கியத்தின் வீட்டுக்கு வந்தார். அவரை இங்கு வரக்கூடாது கள்ளக்காதலி வீட்டுக்கே செல்லுங்கள் என பாக்கியம் கூறினார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபுராஜ் பீர் பாட்டிலை உடைத்து பாக்கியத்தை குத்த முயன்றார். இதனை பார்த்த அவர் அங்கு கிடந்த கட்டையால் கணவனின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    கணவரை கொலை செய்து விட்டோமே என்ற பயத்தில் பாக்கியம் தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்து கொசு விரட்டி மருந்து, மாத்திரை மற்றும் பினாயில் ஆகியவற்றை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    அதிகாலை 4 மணியளவில் தாயை தேடி வெளியே வந்த இவர்களது மூத்த மகள் தாய் தந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாபுராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை ஒண்டிப்புதூர் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற வழக்கு அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள தண்ணீர் தோட்ட வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கட்டிட தொழிலாளி. நேற்று இவர் அன்னூர் அருகே உள்ள ரமேஷ் என்பவரது தோட்டத்தில் கட்டுமான பணிக்காக சென்றார். பணி முடிந்ததும் தனது நண்பரான ஒண்டிப்புதூர் நவரச காலனியை சேர்ந்த வேல்முருகன் (30) என்பவருடன் சேர்ந்து மது குடிப்பதற்காக சென்றார்.

    அன்னூர்-சத்தி ரோட்டில் சந்தையூர் பரிவு அருகே வைத்து 2 பேரும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் வேல்முருகன் கூடுதலாக மது வாங்குவதற்காக பணம் கொடுக்கும்படி முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் தான் வைத்து இருந்த மரக்கட்டையால் முருகனின் தலை மற்றும் உடலில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் முருகனை டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாதவரம் ரவுண்டானா அருகே தூங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மாதவரம்:

    சென்னை, கொண்டித்தோப்பு சுந்தரம்பிள்ளை 2-வது தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 58).

    மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இரவு நேரத்தில் வேலை முடிந்ததும் கோவிந்தராஜ் அங்குள்ள எடைமேடை அருகே தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் வேலை முடிந்ததும் மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ஒரு எடை மேடை அருகே தூங்க சென்றார்.

    சிறிது நேரம் கழித்து மற்ற தொழிலாளர்கள் அங்கு சென்றபோது கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை முழுவதும் கல்லால் தாக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் பாக்யராஜ், நாகேஸ்வரராவ் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிந்த ராஜை உடன் வேலை பார்த்த நண்பர்களான மாதவரத்தை சேர்ந்த தொழிலாளிகள் சுரேஷ், அன்பழகன் ஆகிய 2 பேர் கல்லால் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    தலைமறைவாக இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இரவில் தூங்குவதற்கு இடம் பிடித்தபோது ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜை கல்லால் அடித்து கொன்றதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×